டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி புவனேஷ்வர் குமார் சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம், டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
டி20 போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா 347 விக்கெட்டுகள் வீழ்த்தி இரண்டாமிடத்தில் இருந்த நிலையில், தற்போது புவனேஷ்வர் குமார் அவரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள இந்திய வீரர்கள்
யுஸ்வேந்திர சஹால் - 391 விக்கெட்டுகள்
புவனேஷ்வர் குமார் - 350 விக்கெட்டுகள்
ஜஸ்பிரித் பும்ரா - 347 விக்கெட்டுகள்
பியூஷ் சாவ்லா - 327 விக்கெட்டுகள்
ரவிச்சந்திரன் அஸ்வின் - 317 விக்கெட்டுகள்
Summary
Bhuvneshwar Kumar has set a record by taking the most wickets in T20 matches.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பும்ரா கால்பந்து வீரரா? வருத்தம் தெரிவித்த ராம் சரண்!
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

தனிநபர் சாதனையைக் காட்டிலும் அணியின் இலக்கே முக்கியம்: புவனேஷ்வர் குமார்

பர்பிள் கேப் வென்ற புவனேஷ்வர் குமார்..! ஆட்ட நாயகன் விருது தராதது ஏன்?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


