தனிநபர் சாதனையைக் காட்டிலும் அணியின் இலக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 28 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம், 17 விக்கெட்டுகளுடன் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறினார்.
இந்த நிலையில், தனிநபர் சாதனையைக் காட்டிலும் அணியின் இலக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பர்பிள் தொப்பி எனக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், தனிநபர் சாதனையைக் காட்டிலும் அணியின் இலக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாடுவதை விரும்புவதாக நினைக்கிறேன். கண்டிப்பாக நான் சாதனைகள் படைக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால், அதைக் காட்டிலும் அணியின் இலக்குகளுக்காக விளையாட விரும்புகிறேன். நான் இளம் வீரர் கிடையாது. இளம் வீரராக இருக்கும்போது, நிறைய விருதுகள் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், அணியின் இலக்குகளில் கவனம் செலுத்தும்போது, விருதுகள் கிடைப்பது நல்ல உணர்வைத் தருகிறது என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஷ்வர் குமார் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Royal Challengers Bangalore fast bowler Bhuvneshwar Kumar has stated that he prioritizes team goals over individual achievements.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புவனேஷ்வர் குமாருக்கு எதிராக சொதப்பியிருக்கும் ஷுப்மன் கில்..! அதிர்ச்சியான புள்ளி விவரங்கள்!

ஐபிஎல் தொடரில் 200-வது போட்டியில் விளையாடும் முதல் வேகப் பந்துவீச்சாளர்!

டி20 போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்குத் தள்ளிய புவனேஷ்வர் குமார்!

பர்பிள் கேப் வென்ற புவனேஷ்வர் குமார்..! ஆட்ட நாயகன் விருது தராதது ஏன்?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


