நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 291 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 291 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image

மாட் ஹென்றி - படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :5 மணி நேரங்கள் முன்பு

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 291 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி 391 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 291 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக எமிலியோ கே 53 ரன்களும், மேத்யூ ஃபிஷர் 50* ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, கேப்டன் ஜோ ரூட் 46 ரன்கள், பென் டக்கெட் 36 ரன்கள் எடுத்தனர். ஜோர்டான் காக்ஸ் 27 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வில்லியம் ஓ’ரூர்க் இரண்டு விக்கெட்டுகளையும், கைல் ஜேமிசன் மற்றும் நாதன் ஸ்மித் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்தைக் காட்டிலும் 100 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி, அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

In the second Test match against New Zealand, the England team was bowled out for 291 runs in the first innings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.