வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேசம் - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டி சட்டோகிராமில் இன்று (ஜூன் 19) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
மாட் ரென்ஷா, டிம் டேவிட் அதிரடி!
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஷ் இங்லிஷ் 11 ரன்களும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 20 ரன்களும் எடுத்தனர். கூப்பர் கானலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, மாட் ரென்ஷா மற்றும் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது.
அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 26 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். மாட் ரென்ஷா 52 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.
நசும் அகமது இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அப்துல் காஃபர் சாக்லைன், நஹித் ராணா, முஷ்பிகர் ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!
197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக சைஃப் ஹாசன் 33 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பர்வேஸ் ஹொசைன் எமோன் 36 ரன்களும், தௌஹித் ஹிரிடாய் 35 ரன்களும் எடுத்தனர். தன்சித் ஹாசன் 30 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா தரப்பில் ஆரோன் ஹார்டி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நாதன் எல்லிஸ், மாட் ரென்ஷா, ஆடம் ஸாம்பா மற்றும் ஜோயல் டேவிஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
Summary
The Australian team won the second T20 match against Bangladesh by 7 runs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாட் ரென்ஷா, டிம் டேவிட் அதிரடி: வங்கதேசத்துக்கு 197 ரன்கள் இலக்கு!

கடைசி ஒருநாள்: கூப்பர் கானலி அதிரடி; பரபரப்பான ஆட்டத்தில் ஆஸி. த்ரில் வெற்றி!

பூஜ்ய ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா..! மிரட்டும் வங்கதேசம்!

கடைசி டி20: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை சமன் செய்த நியூசிலாந்து!
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


