பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

லார்ட்ஸ் டெஸ்ட்: ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ராபின்சன்..! நியூசிலாந்து தடுமாற்றம்!

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி குறித்து...

News image

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள். - படங்கள்: எக்ஸ் / இங்கிலாந்து கிரிக்கெட்.

Updated On :5 ஜூன் 2026, 11:06 am IST

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்றிரவு லார்ட்ஸ் கிரிக்கெட் திடலில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 39.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் அபாரமாக பந்துவீசிய நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து சார்பில் பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 56 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.

இதில், அதிகபட்சமாக க்ளென் பிலிப்ஸ் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஆலி ராபின்சன் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். குறிப்பாக ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்தை மிரட்டினார்.

மேகமூட்டமான சூழ்நிலையால் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் அமைந்திருந்தது. தொடக்கத்தில் மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Summary

England's Robinson takes 4-10 as New Zealand slumps to 61-6 at Lords

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.