நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆலி ராபின்சன் விலகியுள்ளார்.
நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், நாளை மறுநாள் (ஜூன் 17) ஓவலில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
நைட் கிளப்பில் ஏற்பட்ட சம்பவத்தினால் பென் ஸ்டோக்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் இரண்டாவது டெஸ்ட்டில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வேகப் பந்துவீச்சாளர் ஆலி ராபின்சன் முழங்கால் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ஆலி ராபின்சனுக்கு மாற்றாக இங்கிலாந்து அணியில் அன்கேப்டு வீரர் ஹென்றி க்ரோகோம்ப் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆலி ராபின்சன் 7 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அவர்கள் இருவரும் அணியில் இல்லாதது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.
இரண்டாவது டெஸ்ட்டில் விளையாட பென் ஸ்டோக்ஸுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அணியை ஜோ ரூட் கேப்டனாக வழிநடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
England fast bowler Ollie Robinson has withdrawn from the second Test match against New Zealand due to injury.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 291 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

பென் ஸ்டோக்ஸ் முக மாற்றம்..! கவலையில் ரசிகர்கள்!

லார்ட்ஸ் டெஸ்ட்: ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ராபின்சன்..! நியூசிலாந்து தடுமாற்றம்!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு


