பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பென் ஸ்டோக்ஸ் முக மாற்றம்..! கவலையில் ரசிகர்கள்!

இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முகத்தின் மாற்றம் குறித்து...

News image

பென் ஸ்டோக்ஸ் 6 மாதத்திற்கு முன்பும் பின்பும்... - படங்கள்: இங்கிலாந்து கிரிக்கெட்

Updated On :5 ஜூன் 2026, 11:54 am IST

இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி நேற்றிரவு லார்ட்ஸ் கிரிக்கெட் திடலில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 39.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அடுத்ததாக தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் 12 ரன்களுக்கு பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் 3.2 ஓவர்கள் மட்டுமே வீசினார்.

இந்தப் போட்டிக்கு முன்பாகவும் பின்பாகவும் பென் ஸ்டோக்ஸ் பேசியபோது அவரது முகத்தின் புகைப்படங்கள் பெரிதும் வைரலாகின.

பென் ஸ்டோக்ஸ் காயம்.

பென் ஸ்டோக்ஸ் காயம். - படம்: இன்ஸ்டா / பென் ஸ்டோக்ஸ்

சில மாதங்களுக்கு முன்பாக பயிற்சியின்போது முகத்தில் பந்துபட்டு காயம் ஏற்பட்டது. அறுவைச் சிகிச்சை செய்தும் அவரது முகம் பழைய நிலைமைக்குத் திரும்பவில்லை. இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டதாக கவலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்தக் காயத்தின்போது பென் ஸ்டோக்ஸ், “நான் உயிருடன் இருப்பதே பெரிய விஷயம்” எனக் கூறியிருந்தார். டெஸ்ட்டில் சிறந்த ஆல்ரவுண்டர்கள் வரிசைகளில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்றுள்ளார்.

Summary

Ben Stokes life-changing injury sparks debate online about his facial changes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.