ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதலிடம் வகித்து வருகிறது.
ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையை ஆண்டுதோறும் ஐசிசி வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில் இந்தியா தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதலிடம் வகித்து வருகிறது.
இந்திய அணி கடைசியாக 2023-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது பாகிஸ்தானை முந்தி முதலிடத்தைப் பிடித்தது. அதன் பிறகு, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளின் தரவரிசைப்படியும், தற்போது 2026 ஆம் ஆண்டின் சமீபத்திய ஐசிசி தரவரிசைப் பட்டியலிலும் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து சாதனை படைத்துள்ளது.
இந்தியா முதலிடத்தில் இருந்தாலும் புள்ளிகள் இந்த ஆண்டு குறைந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு 119 புள்ளிகளைப் பெற்ற இந்தியா தற்போது 118 புள்ளிகளைப் பெற்று, முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில், கடந்த ஆண்டை விட கூடுதலாக 2 புள்ளிகள் பெற்று மொத்தம் 113 புள்ளிகளுடன் நியூசிலாந்து இரண்டாம் இடத்தில் உள்ளது. நடப்பு உலகக் கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலியா, 109 புள்ளிகளுடன் மாற்றமின்றி மூன்றாவது இடத்தில் உள்ளது.
தரவரிசையில் முதல் 10 இடங்களில் கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் உள்ள ஒரே மாற்றம் தென்னாப்பிரிக்கா பாகிஸ்தானை முந்தி நான்காவது இடத்தில் உள்ளது.
மேலும், ஐசிசி ஆடவர் டி20 தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில், டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. மகளிர் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டு பட்டியல்களிலும் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது.
கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை, இந்திய ஆடவர் அணி வெவ்வேறு காலக்கட்டங்களில் மொத்தம் ஆறு முறை ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் இருந்துள்ளது.
முன்னதாக, 2013 ஆம் ஆண்டு எம்.எஸ். தோனியின் தலைமையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்ற போது, முதன்முறையாக ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடம். - ஐசிசி
Summary
India has held the top spot in the ODI rankings for three consecutive years.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐசிசி தரவரிசையில் முதல் முறையாக முதலிடம் பிடித்து ஸ்ரீ சரணி அசத்தல்!

ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த ஹாரி ப்ரூக்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் வங்கதேச வீரர்கள் முன்னேற்றம்!

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்த இந்தியா!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


