ஐசிசி டி20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி முதல் முறையாக முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் இளம் வீராங்கனைகளில் ஒருவரான ஸ்ரீ சரணி அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இந்த நிலையில், ஐசிசி டி20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் முறையாக ஸ்ரீ சரணி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து வீராங்கனை லின்ஸி ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி ஸ்ரீ சரணி முதலிடம் பிடித்துள்ளார். 21 வயதாகும் ஸ்ரீ சரணி ஐசிசி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த லின்ஸி ஸ்மித் மூன்றாவது இடத்துக்கு சறுக்கியுள்ளார். இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் சார்லி டீன் மற்றும் நான்காவது இடத்தில் சோஃபி எக்கல்ஸ்டோனும் உள்ளனர்.
21 வயதாகும் சுழற்பந்துவீச்சாளரான ஸ்ரீ சரணி இந்திய அணிக்காக கடந்த ஆண்டு அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
Summary
Indian player Shree charani has achieved the top spot in the ICC T20 bowling rankings.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 3 ஆண்டுகளாக தொடர்ந்து இந்தியா முதலிடம்!

ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த ஹாரி ப்ரூக்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் வங்கதேச வீரர்கள் முன்னேற்றம்!

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்த இந்தியா!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


