ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக 100 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் வருண் சக்ரவர்த்தி இடம்பெற்றுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து, களமிறங்கிய குஜராத் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 எடுத்து வெற்றி பெற்றது. குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தனது அதிரடி ஆட்டத்தால் 50 பந்துகளில் 86 ரன்கள் எடுத்திருந்தது அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.
இந்த நிலையில், கொல்கத்தா அணி தோல்வியடைந்த போதிலும் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதனால், கொல்கத்தா அணிக்காக மட்டும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸலைத் தொடர்ந்து கொல்கத்தா அணிக்காக நூறு விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை வருண் சக்ரவர்த்தி பெற்றுள்ளார்.
அதிகபட்சமாக கொல்கத்தாவுக்காக சுனில் நரைன் 196 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிலும், 122 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆண்ட்ரே ரஸல் இரண்டாம் இடத்திலும் மற்றும் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி வருண் சக்ரவர்த்தி மூன்றாவது இடத்தில் உள்ளது.
மேலும், ஐபிஎல் வரலாற்றிலேயே 224 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Varun Chakravarthy has joined the list of players who have taken 100 wickets for the Kolkata team in the IPL series.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஃபின் ஆலன் அபாரம்: கொல்கத்தாவுக்கு 4-ஆவது வெற்றி

வருண் சக்ரவர்த்தி, கார்த்திக் தியாகி அபாரம்; கொல்கத்தாவுக்கு 156 ரன்கள் இலக்கு!

வருண் சக்ரவர்த்தி டி20யில் 200 விக்கெட்டுகள்!

வருண் சக்ரவர்த்தி மீண்டு வருவாரா? கேகேஆர் தலைமைப் பயிற்சியாளர் பதில்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

