கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர், “வருண் சக்கரவர்த்தி மீண்டு வருவார்; அதில் சந்தேகமே இல்லை” எனக் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2026 சீசனின் முதல் போட்டியில் கேகேஆர் அணி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் விளையாடியது. முதலில் விளையாடிய கேகேஆர் 220/4 ரன்கள் குவிக்க, மும்பை 19.1 ஓவர்களில் 224/4 ரன்கள் எடுத்து வென்றது.
வானகடேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வருண் சக்ரவர்த்தி மோசமாக பந்துவீசினார். 4 ஓவர்களில் விக்கெட் ஏதும் எடுக்காமல் 48 ரன்களை வழங்கினார். ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன் சிறப்பாக விளையாடினார்கள்.
இந்நிலையில், கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அபிஷேக் சர்மா கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டுகளில் வருண் பல இன்னல்களைச் சந்தித்துள்ளார். அணியாக, பயிற்சியாளராக நாங்கள் அவரை நம்புகிறோம். அவரிடம் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், சில அணிகள் அவரது ஓவரை நன்றாக விளையாடிவிட்டது.
அதற்காக, வருண் திரும்ப வரவே மாட்டார் எனக் கூற முடியாது. இதற்கு முன்பாக வருண் சந்தித்தது போலவே, இதுவும் ஒரு சவால்தான். உலகத்தில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுமே இவரது கம்பேக்கிற்கு காத்திருக்கிறது.
கடந்த காலம் மாதிரியே வருண் விரைவில் திரும்ப வருவார் என்பதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. மன ரீதியாக வருண் நன்றாகவே இருக்கிறார்.
கடந்தாண்டுகளில் அவர் அதிகமாக சாதித்து விட்டதால், அவர் மீது அதீத எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தியாவுக்காக அவர் சிறப்பாக செயல்பட்டதால்தான் அவரை மிகவும் அச்சுறுத்தலான பந்துவீச்சாளர் எனக் கூறுகிறார்கள்.
புள்ளிவிவரங்களின்படி வருண் அதே வேகம், அதே லெந்தில்தான் பந்துவீசுகிறார். சில நேரங்களில் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு விடுகிறார்கள். வான்கடே சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சவாலானது. அவர் விக்கெட் எடுக்க தொடங்கினால், வேறு மாதிரியான வீரராக மாறிவிடுவார் எனக் கூறினார்.
Summary
It''s inevitable Varun will bounce back: Nayar backs mystery spinner amid concerns
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் 2026ல் சிறந்த எகானமி: முதலிடத்தில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்!

வருண் சக்ரவர்த்தி, கார்த்திக் தியாகி அபாரம்; கொல்கத்தாவுக்கு 156 ரன்கள் இலக்கு!

வருண் சக்ரவர்த்தி டி20யில் 200 விக்கெட்டுகள்!
100 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் வருண் சக்ரவர்த்தி!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


