ஆர்சிபி சுழல் பந்துவீச்சாளர் க்ருணால் பாண்டியாவைப் போல கிண்டல் செய்து பந்துவீசிய விடியோ வெளியிட்டிருந்த சிஎஸ்கே ரசிகர் ராஜ்பிரியனின் விடியோவை பகிர்ந்து ஆச்சரியம் அளித்துள்ளார்.
சின்னசாமியில் ஏப்.15ஆம் தேதி நடைபெற்ற லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய க்ருணால் பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அத்துடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள், 1000க்கும் அதிகமான ரன்கள் எடுத்த ஆறாவது வீரராக சாதனை நிகழ்த்தினார்.
இந்த சீசனில் சுழல் பந்துவீச்சாளரான க்ருணால் பாண்டியா வேகப் பந்துவீச்சாளர்கள் போல பௌன்சர் பந்துகளை வீசி பேட்டர்களை திணறடித்து வருகிறார்.
இந்த ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்து, இன்ஸ்டாகிராமில் ராஜ்பிரியன் லுங்கி பாய்ஸ் என்ற பெயரில் விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
ராஜ்பிரியன் என்ற இவர் சிஎஸ்கே ரசிகர் என்பதும் ஆர்சிபி ரசிகர்களுக்கு இடையே அவர்களது ரசிகர்கள் போலவே இருந்து அவர்களை கிண்டல் செய்து வருகிறார்கள். துரந்தர் படத்தின் ரீல்ஸ் எல்லாம் பல லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலானது.
இந்த அமோக வரவேற்பினால் நடிகர் சிவகார்த்திகேயன் இவர்களை அழைத்து பாராட்டினார். இந்த நிலையில், க்ருணால் பாண்டியாவே அவர்களது விடியோவை பகிர்ந்துள்ளது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.
இந்த விடியோ சிஎஸ்கே மட்டுமில்லாமல் ஆர்சிபி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இந்த விடியோ இதுவரை 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Krunal Pandya Shares Video of CSK Fan Rajpriyan Lungi Boys!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேட்டர்களின் சவாலை சமாளிப்பது எப்படி? க்ருணால் பாண்டியா பதில்!

ஆடுகளத்தில் குறையல்ல; பந்துவீச்சில் அசத்திய ஆர்சிபி: க்ருணால் பாண்டியா

சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா!

ஆர்சிபி வீரர்கள் அமைதியாகவும், தெளிவாகவும் இருக்கிறார்கள்: க்ருணால் பாண்டியா
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

