ஆர்சிபி ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா ஐபிஎல் வரலாற்றில் மிகவும் பெருமைமிக்க சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
நேற்றிரவு சின்னசாமி திடலில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 20 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய ஆர்சிபி அணி 15.1 ஓவர்களில் 149/5 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஆர்சிபியின் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா (35 வயது) 4 ஓவர்களில் 38 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இந்த விக்கெட் எடுத்ததன் மூலமாக ஐபிஎல் வரலாற்றில் 100 விக்கெட்டுகள், 1000க்கும் அதிகமான ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
இதுவரை இந்த சாதனைப் பட்டியலில் ஐவர் இருந்தார்கள். தற்போது ஆறாவது நபராக க்ருணால் பாண்டியா இணைந்துள்ளார்.
முன்னதாக, ஜடேஜா, சுனில் நரைன், டிவைன் ப்ராவோ, அக்ஷர் படேல், ஆண்ட்ரே ரஸல் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்கள்.
கடந்த சீசனிலும் இந்த சீசனிலும் சிறப்பான ஃபார்மில் இருக்கும் அவருக்கு மீண்டும் இந்திய அணியில் இடம்கிடைக்க வேண்டுமென உறுதியுடன் விளையாடி வருகிறார்.
Summary
Krunal Pandya becomes only the 6th player to tick both boxes in ipl
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேட்டர்களின் சவாலை சமாளிப்பது எப்படி? க்ருணால் பாண்டியா பதில்!

ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனை; விராட் கோலிக்கு க்ருணால் பாண்டியா புகழாரம்!

ஆடுகளத்தில் குறையல்ல; பந்துவீச்சில் அசத்திய ஆர்சிபி: க்ருணால் பாண்டியா

சிஎஸ்கே ரசிகர் ராஜ்பிரியன் விடியோவை பகிர்ந்த க்ருணால் பாண்டியா!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

