இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவது சவாலல்ல வரம் என இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பேசியுள்ளார்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான வாஷிங்டன் சுந்தர், கடந்த ஒன்றரை ஆண்டாக இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம்பெற்று சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவது சவால் கிடையாது எனவும், அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவது வரம் எனவும் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் வீரராக இருப்பது மிகப் பெரிய வரம். ஏனெனில், இந்திய அணி எப்படி விளையாடிக் கொண்டிருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்திய அணிக்காக மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருப்பது அழகான வரம். என்னுடைய நாட்டுக்காக நிறைய போட்டிகளை வென்று கொடுக்க வேண்டும் என்பதை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவதில் அதிகம் சவால்களை பார்க்கவில்லை. அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவதற்கு உடல்தகுதி என்பது மிகவும் முக்கியம். வீரர் ஒருவர் அவரது உடல் எப்படி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்றவாறு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். என்னுடைய உடற்தகுதியில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறேன். கடந்த ஓராண்டாக இந்திய அணியில் நன்றாக செயல்பட்டு வருகிறேன் என்றார்.
26 வயதாகும் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக இதுவரை 17 டெஸ்ட், 29 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Indian all-rounder Washington Sundar has stated that playing for the Indian team across all formats is not a challenge, but a blessing.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரஜினி - 173 படத்திலிருந்து விலகியது ஏன்? சுந்தர். சி விளக்கம்!

சுந்தர். சி மலிவான பப்ளிசிட்டி செய்பவர் அல்ல: குஷ்பு

சுந்தர். சியின் சொத்து விவரங்கள் வெளியீடு!
தேனி டூ வாஷிங்டன்! அமெரிக்க தலைநகரின் மேயர் போட்டியில் தமிழ்ப் பெண்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


