மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சுந்தர். சி மலிவான பப்ளிசிட்டி செய்பவர் அல்ல: குஷ்பு

சுந்தர். சி மலிவான பப்ளிசிட்டி செய்பவர் அல்ல என்று பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

News image

குஷ்பு

Updated On :19 ஏப்ரல் 2026, 2:04 pm IST

சுந்தர். சி மலிவான பப்ளிசிட்டி செய்பவர் அல்ல என்று பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்திருந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், குஷ்புவுக்கே சீட் கிடைக்காத போது, சுந்தர். சிக்கு எப்படி சீட் கிடைத்தது என அவர் சிந்தித்து பார்க்க வேண்டும் என்ற நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்துக்கு, பிரகாஷ் ராஜ் என் நண்பர் தான்.

அவர் பிடிஆர் உடன் என்னை ஒப்பிட்டு பேசியுள்ளார். திமுகவில் இருக்கும் செந்தில் பாலாஜி, சேகர் பாபு திமுகவிலேயே பிறந்து வளர்ந்தவர்களா? கர்நாடகத்தில் பிரகாஷ் ராஜ் தேர்தலில் போட்டியிட்டு நின்று டெபாசிட் கூட வாங்காமல் தோற்றுப் போனார். நேரமிருந்தால் அவரை சிந்தித்து பார்க்கச் சொல்லுங்கள்.

பிடிஆர் விமர்சனம் செய்வது குறித்த கேள்விக்கு, எங்களை கூத்தாடி என்று சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பப்ளிசிட்டிக்கு ஒரு கூத்தாடி தானே தேவைப்படுகிறார்? பிடிஆர் தன் படிப்பை காட்டுகிறார், நாங்கள் என் வளர்ப்பை காட்டுகிறோம்.

நாங்கள் பரம்பரையாக அரசியல் செய்துகொண்டு மக்களை சந்திக்கவில்லை. எங்களை அடையாளப்படுத்தி தான் அரசியல் செய்து வருகிறோம். நாங்கள் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி பல பேரை படிக்க வைத்துள்ளோம். சுந்தர். சி மலிவான பப்ளிசிட்டி செய்பவர் கிடையாது.

கடந்த 2023 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையரை மசோதாவை ஏன் தாக்கல் செய்யவில்லை என்ற ராகுல் காந்தியின் கருத்துக்கு, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏன் மசோதாவை தாக்கல் செய்யவில்லை?

பெண்களின் முதுகில் குத்துவதற்கு பதிலாக நெஞ்சில் குத்தியுள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுக்காமல் எப்படி மசோதாவை தாக்கல் செய்ய இயலும்? ராகுல் காந்தி, திமுகவினர் படித்தும் முட்டாளாக இருக்கிறார்கள். மக்களை ஏமாற்றும் வேலையை செய்து வருகிறார்கள். இவ்வாறு தெரிவித்தார்.

Summary

BJP functionary and actress Khushbu has said that Sundar C is not a cheap publicity guy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.