விஜய் மனதில் பாஜகதான் உள்ளது என்று பாஜக துணைத்தலைவரும், பிரபல நடிகையுமான குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதுச்சேரியில் அளித்த பேட்டியில், அரசியலுக்கு விஜய் இப்போதுதான் வந்திருக்கிறார் விட்டுவிடுங்கள், பாவம். அரசியல் தெரிந்தவர்கள் பற்றி பேசலாம். அவர் நேற்றுதான் வந்திருக்கிறார்.
யாருக்கு வாக்கு சேகரிக்கிறோம் என்று தெரியாம, எங்க கட்சி வேட்பாளர் பெயரை சொல்லிவிட்டு போயிருக்கிறார். விஜய் மனதில் பாஜகதான் இருக்கிறது. அது மட்டும் உறுதி. புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்.
புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்பார். பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது திமுக - காங்கிரஸ். தமிழகம் - புதுச்சேரி மக்கள் இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள். இரு இடங்களிலும் தேஜ கூட்டணிக்கு வெற்றி நிச்சயமாக உள்ளது.
அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாதது தலைமையின் முடிவு. ராகுல் காந்தி பிரதமராக வாய்ப்பே கிடையாது. இவ்வாறு குறிப்பிட்டார். முன்னதாக புதுச்சேரியில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட விஜய் தவெக வேட்பாளருக்குப் பதிலாக தவறுதலாக பாஜக வேட்பாளர் பெயரைக் குறிப்பிட்டுவிட்டார்.
தற்போது அதுதொடர்பான கேள்விக்கு பாஜக நிர்வாகி குஷ்பு இவ்வாறு பதிலளித்துள்ளார்.
Summary
BJP Vice President and popular actress Khushbu Sundar has stated that the BJP is what is truly in Vijay's heart.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுந்தர். சி மலிவான பப்ளிசிட்டி செய்பவர் அல்ல: குஷ்பு

குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!

”விஜய் மனதில் பாஜக இருக்கிறது!” குஷ்பு பேட்டி

அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


