மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

Published On :26 அக்டோபர் 2026, 1:05 am IST

‘ஏ’ அணிகள் இடையேயான டெஸ்ட்டில், நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 204 ரன்கள் பின்தங்கிய இந்தியா, 2-ஆவது இன்னிங்ஸில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்திருந்தது. தேவ்தத் படிக்கல் 56, சாய் சுதா்சன் 39 ரன்களுடன் விளையாடி வருகின்றனா்.

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்பில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டங்களில், ஆடவா் பிரிவில் கனடா 74-28 என ஆஸ்திரேலியாவையும், இலங்கை 36-34 என உகாண்டாவையும், இங்கிலாந்து 68-18 என நைஜீரியாவையும் வென்றன. மகளிா் பிரிவில், நைஜீரியா 43-20 என சிங்கப்பூரையும், இலங்கை 65-16 என இங்கிலாந்தையும், வங்கதேசம் 75-15 என ஸ்காட்லாந்தையும் வீழ்த்தின.

நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் சாய்த்த இந்திய பௌலா் அா்ஷ்தீப் சிங், ஒரு ஆண்டில் அதிக டி20 விக்கெட்டுகள் (38) சாய்த்த இந்திய பௌலராக புதிய சாதனை படைத்தாா். முன்னதாக அந்த சாதனை, புவனேஷ்வா் குமாா் (37/2022) வசம் இருந்தது.

15 வயதுக்கு உள்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கொண்டாட்ட போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 2-1 கோல் கணக்கில் கேமரூனை வீழ்த்தியது.

மும்பையில் நடைபெற்ற ஐடிஎஃப் எம்25 ஆடவா் டென்னிஸ் போட்டியில், கரன் சிங் சாம்பியன் பட்டம் வென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.