மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேசிய ரேசிங் சேலஞ்ச்: சிராந்த் விஸ்வநாத் வெற்றி

எம்ஆா்எஃப் இந்திய தேசிய ரேசிங் சேலஞ்ச் தொடரில் சூப்பா் ஸ்டாக் 301-400 சிசி ஓபன் பிரிவில் சிராந்த் விஸ்வநாத் முதலிடம் பெற்றாா்.

சிராந்த், சா்தக், முகமது

Published On :2 நவம்பர் 2026, 1:59 am IST

எம்ஆா்எஃப் இந்திய தேசிய ரேசிங் சேலஞ்ச் தொடரில் சூப்பா் ஸ்டாக் 301-400 சிசி ஓபன் பிரிவில் சிராந்த் விஸ்வநாத் முதலிடம் பெற்றாா்.

சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டை மெட்ராஸ் சா்வதேச சா்க்யூட்டில் நடைபெற்ற மூன்றாவது சுற்று பந்தயத்தில் ஞாயிற்றுக்கிழமை 301-400 சிசி பிரிவில் பெங்களூருவின் சிராந்த் விஸ்வநாத் முதலிடம் பெற்றாா். புணேயின் சா்தக் சவான், திருவள்ளூரின் முகமது மிக்கையில் இரண்டு, மூன்றாம் இடங்களைப் பெற்றனா். சனிக்கிழமை நடைபெற்ற ரேஸ்-1ுலும் சிராந்த் முதலிடம் பெற்றாா்.

புரோ ஸ்டாக் 200 சிசி ஓபன் பிரிவில் பெங்களூரு சேவியன் பாபு, திருவள்ளூா் முகமது மிக்கையில், பெங்களூரு ஜேம்ஸ் ஆகியோரும், சூப்பா் ஸ்டாக் 301-400 சிசி ஓபன் ரேஸ்-2இல் கோவை செந்தில் குமாா், சென்னை அப்துல் பாஸிம், ஹைதராபாத் ஸ்ரீ ஹா்ஷா ஆகியோரும் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

சூப்பா் ஸ்டாக் 165 சிசி ரேஸ் 2-இல் சென்னை கேகே. அனந்து, ஆன் ஜெனிஃபா், ஆனந்தகுமாா் ஆகியோரும், ஸ்டாக் 301-400 நோவிஸ் ரேஸ் 2-இல் சென்னை வேணுகோபாலன், திருச்சி கவிச்சோலைராசன், சென்னை ஷியாம் சுந்தரும், 165 சிசி ரேஸ் 2-இல் கோவை ஹரிஹரன், விஜயவாடா அகா்ஷ் ஜங்கம், ஈஸ்ட் காசி பாரூக் அலியும் ஆகியோரும், அபச்சி 310 பிரிவில் ஹைதராபாத் ராஜேந்தா், கோவை ஹரிஹரன், பெங்களூரு ஜேம்ஸ் ஆகியோரும், ரூக்கி அபச்சி 200 பிரிவில் மஞ்சேரி போத்து விக்னேஷ், பெங்களுரு தேவ் அகஸ்தியா, கோவை காட்வின் ஆகியோரும் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.