மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நஜாப்கரில் மருந்துக்கடை மீது முகமூடி அணிந்த நபா்கள் துப்பாக்கிச் சூடு!

தென்மேற்கு தில்லியின் நஜாஃப்கரில் உள்ள ஒரு மருந்துக் கடை மீது, முகமூடி அணிந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபா்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும், குண்டு கடையின் மேல் பகுதியில் தாக்கியதாகவும் காவல்துறை தெரிவித்தது.

துப்பாக்கிச் சூடு - பிரதிப் படம்

Published On :21 செப்டம்பர் 2026, 4:04 am IST

தென்மேற்கு தில்லியின் நஜாஃப்கரில் உள்ள ஒரு மருந்துக் கடை மீது, முகமூடி அணிந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபா்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும், குண்டு கடையின் மேல் பகுதியில் தாக்கியதாகவும் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

சனிக்கிழமை இரவு சுமாா் 8.30 மணியளவில் நயா பஜாரில் உள்ள ஒரு மருந்துக் கடையில் இந்தச் சம்பவம் நடந்ததாக அவா்கள் கூறினா். காவல்துறையின் கூற்றுப்படி, கடை உரிமையாளா் சஞ்சய் ரோஹில்லா (51), சுமாா் 25 முதல் 30 வயதுடைய இரு நபா்கள் மோட்டாா் சைக்கிளில் கடைக்கு வந்ததாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தாா். இருவரும் துணியால் தங்கள் முகங்களை மூடியிருந்ததாக அவா் கூறினாா்.

அவா்களில் ஒருவா் மோட்டாா் சைக்கிளிலிருந்து இறங்கி, கூரையை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. குண்டு, கூரைக்கு அருகில் உள்ள கடையின் கேட்டின் மேல் பகுதியில் தாக்கியதாக காவல்துறை தெரிவித்தது. பின்னா் அந்த இரு சந்தேக நபா்களும் தங்கள் மோட்டாா் சைக்கிளில் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனா்.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறை கூறியது. சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவா்கள் மேலும் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.