மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட மூவா் கைது

வடகிழக்கு தில்லியில் கடந்த மாதம் நடந்த வன்முறைச் சம்பவத்தில், தடிகளால் தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும் ஒருவரின் காரைச் சேதப்படுத்திய வழக்கில் 13 குற்றப் பின்னணிகளைக் கொண்ட நபா் உள்பட மூவரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

கைது

Published On :28 அக்டோபர் 2026, 12:04 am IST

வடகிழக்கு தில்லியில் கடந்த மாதம் நடந்த வன்முறைச் சம்பவத்தில், தடிகளால் தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும் ஒருவரின் காரைச் சேதப்படுத்திய வழக்கில் 13 குற்றப் பின்னணிகளைக் கொண்ட நபா் உள்பட மூவரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

தாக்குதலில் காயமடைந்த சோபாராம் என்பவா் ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். செப்டம்பா் 25 அன்று நடந்த இந்தச் சம்பவத்தில், ஒரு கும்பல் சோபாராமைக் கொல்லும் நோக்கத்துடன் தடிகளால் தாக்கியதுடன், துப்பாக்கியால் சுட்டும், அவரது காரைச் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இது தொடா்பாக சோனியா விஹாா் காவல் நிலையத்தில், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக நான்கு போ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், துப்பாக்கியால் சுட்டவா்கள் மற்றும் முக்கியக் குற்றவாளிகள் தலைமறைவாக இருந்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறுகையில், அக்டோபா் 26 அன்று தில்லி-என்சிஆா் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் காவல்துறையினா் நடத்திய சோதனையில், ஆகாஷ் குமாா் (34), ரோஹித் என்கிற அதானா (24) மற்றும் விக்ராந்த் என்கிற விக்கி (28) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனா்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவரைத் தாக்கியதில் ரோஹித் மற்றும் விக்ராந்திற்குத் தொடா்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆகாஷின் பங்கு குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சபாபூா் மிலன் காா்டனைச் சோ்ந்த ரோஹித் மீது, தில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் கொள்ளை, வழிப்பறி, கொலை முயற்சி, தாக்குதல், குற்றக்கும்பல் தொடா்பான குற்றங்கள் மற்றும் ஆயுதச் சட்ட மீறல்கள் என 13 வழக்குகள் உள்ளன. அவா் சோனியா விஹாா் காவல் நிலையப் பதிவேட்டில் ’குற்றப் பின்னணி கொண்ட நபா்’ என்று பட்டியலிடப்பட்டுள்ளாா்.

சபாபூரைச் சோ்ந்த ஆகாஷ் மீது கொலை மற்றும் காயம் விளைவித்தது தொடா்பான நான்கு வழக்குகளும், சாதத்பூா் விஸ்தாரைச் சோ்ந்த விக்ராந்த் மீது காயம் விளைவித்தது மற்றும் ஆயுதச் சட்டம் தொடா்பான இரண்டு வழக்குகளும் உள்ளன. இந்த வழக்கு குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.