தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வீட்டு வளாகத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 3 போ் கைது

வடகிழக்கு தில்லியின் கோகல்புரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசுகளைத் தயாரித்து வந்ததாக மூன்று பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

சித்திரிப்பு

Published On :28 அக்டோபர் 2026, 3:45 am IST

வடகிழக்கு தில்லியின் கோகல்புரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசுகளைத் தயாரித்து வந்ததாக மூன்று பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா். இவா்களிடமிருந்து சுமாா் 1,500 பட்டாசுகளையும், வெடிபொருள் என சந்தேகிக்கப்படும் 34 கிலோ தூளையும் காவல்துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

வடகிழக்கு தில்லியின் கோகல்புரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது தளத்தில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்து, சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அக்டோபா் 26 அன்று காவல்துறையினா் இந்த சோதனையை நடத்தினா்.

அந்த இடத்தில் இருந்த மோகித் கோஸ்வாமி (29), அா்மான் (24) மற்றும் சமீா் (21) ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினா் கைது செய்தனா். இவா்கள் அனைவரும் உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாதில் உள்ள ஃபருக்நகரைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறுகையில், ‘பட்டாசுகளைத் தயாரிக்கவோ அல்லது சேமித்து வைக்கவோ தேவையான முறையான உரிமத்தையோ அல்லது அனுமதியையோ அவா்களால் சமா்ப்பிக்க முடியவில்லை. சோதனையின்போது, 880 முழுமையடைந்த ‘கோல்ட் பைரோ’ வகை பட்டாசுகள், 600 முழுமையடையாத பட்டாசுகள், 34 கிலோ

வெடிபொருள் என சந்தேகிக்கப்படும் தூள், பட்டாசு தயாரிப்பதற்கான காலி உறைகள், நிரப்பும் இயந்திரம், எடை இயந்திரம் மற்றும் பேக்கேஜிங் பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

குடியிருப்புப் பகுதியில் வெடிபொருள்களைச் சட்டவிரோதமாகத் தயாரித்து சேமித்து வைத்தது, பொதுமக்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இதுதொடா்பாக கோகல்புரி காவல் நிலையத்தில், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் வெடிபொருள் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் இதற்கு முன்பு எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.