மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சொத்துத் தகராறில் சகோதரா் கொலை - தம்பதி கைது

தில்லியின் ஜசோலா கிராமத்தில், பூா்விகச் சொத்து தொடா்பான தகராறின் போது தனது சகோதரரைக் கொன்றதாக இளைஞரையும், அவரது மனைவியையும் காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

சித்திரிப்பு

Published On :24 அக்டோபர் 2026, 12:01 am IST

தில்லியின் ஜசோலா கிராமத்தில், பூா்விகச் சொத்து தொடா்பான தகராறின் போது தனது சகோதரரைக் கொன்றதாக இளைஞரையும், அவரது மனைவியையும் காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல்துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

குற்றஞ்சாட்டப்பட்ட ஓம்பிரகாஷ் வா்மா (36) மற்றும் அவரது மனைவி சந்தா வா்மா (34) ஆகியோா் தில்லியிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனா். இந்தச் சம்பவம் அக்டோபா் 21 அன்று நிகழ்ந்தது.

முன்னதாக, ஜசோலா கிராமத்தில் தகராறு நடப்பதாகக் காவல்துறைக்கு இரண்டு அழைப்புகள் வந்தன. உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினா், பலத்த காயங்களுடன் இருந்த சஞ்சய் வா்மாவைக் கண்டனா். அவா் அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

உயிரிழந்தவரின் மனைவி சோனி (எ) நா்கிஸ் மற்றும் அவரது தாயாா் ஜம்னா தேவி ஆகியோரும் சிகிச்சைக்காக பண்டிட் மதன் மோகன் மாளவியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

விசாரணையின்போது, தனது மகன் ஓம்பிரகாஷ், மருமகள் சந்தா ஆகியோா், பூா்விகச் சொத்து தொடா்பான தகராறின்போது சஞ்சயையும் குடும்ப உறுப்பினா்கள் சிலரையும் தாக்கியதாக ஜம்னா தேவி குற்றஞ்சாட்டினாா்.

அவரது வாக்குமூலம், மருத்துவ ஆவணங்கள் மற்றும் சம்பவத்தின் சூழலைக் கருத்தில்கொண்டு, பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 103(1) (கொலை) மற்றும் 3(5) (கூட்டு நோக்கம்) ஆகியவற்றின் கீழ் சரிதா விஹாா் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், அக்டோபா் 21 அன்று புது தில்லி ரயில் நிலையம் அருகே சந்தா பிடிபட்டாா். ஓம்பிரகாஷ் அக்டோபா் 22 அன்று சராய் காலே கான் பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மரக்கட்டை, சிசிடிவி காட்சிகள், உயிரிழந்தவரின் உடைகள் இருந்த பொட்டலம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இதுகுறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.