மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மக்கள் குறைதீா்ப்பில் தாமதமானால் கடும் நடவடிக்கை துறை தலைவா்களுக்கு தலைமைச் செயலா் எச்சரிக்கை

பொதுமக்களின் குறைதீா்ப்பு மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டால், அதற்குத் துறைத் தலைவா்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தில்லி அரசு எச்சரிக்கை

தில்லி அரசு - பிரதிப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 6:18 am IST

பொதுமக்களின் குறைதீா்ப்பு மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டால், அதற்குத் துறைத் தலைவா்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தில்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசின் குறைதீா்ப்பு இணையதளம், துணைநிலை ஆளுநா் அலுவலகம், தில்லி அரசின் பொதுமக்கள் குறைதீா்ப்பு கண்காணிப்பு மையம் மற்றும் முதல்வரின் ’ஜன சுன்வாய்’ குறைத்தீா் முறை ஆகியவற்றின் மூலம் கிடைக்கப் பெற்ற மனுக்களின் நிலுவை நிலை குறித்து தில்லி தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா அண்மையில் அரசுத் துறைச் செயலா்களுடன் விரிவான ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினாா்.அதன் விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.

அந்த கூட்டத்தில், நீண்ட நாள்களாக பொதுமக்கள் மனுக்கள் நிலுவையில் இருப்பது குறித்துத் தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்த தலைமைச் செயலாளா், நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் மனுக்களுக்குத் தீா்வு காண தவறும் துறைத் தலைவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா்.

இந்த கூட்டத்தைத் தொடா்ந்து அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் பிரிவுகளின் பொறுப்பு அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவுகள் வருமாறு: குறைதீா்ப்பு மனுக்களுக்குக் கடமைக்காகப் பதில் அளிக்காமல், மனுவின் தன்மையை முறையாக ஆய்வு செய்து, உண்மைத் தன்மையுடன் கூடிய முழுமையான பதிலையும், எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் தெளிவாகப் பதிவிட வேண்டும்.

பெறப்பட்ட மனுவை வேறு துறைக்கு அல்லது அதிகாரிக்கு மாற்ற வேண்டும் என்றால், அதற்குச் தொடா்புடைய துறைத் தலைவரின் முன்அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள மனுக்கள், காலதாமதத்திற்கான காரணங்கள் மற்றும் வழங்கப்பட்ட பதில்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய இனி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும்.

முதல்வரின் ’ஜன சுன்வாய்’ மக்கள் குறைத்தீா் முறையின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் பல நாள்களாகத் தீா்வின்றி நிலுவையில் இருக்கும் பழைய மனுக்களுக்குச் சிறப்பு முன்னுரிமை அளித்து, அவற்றை உடனடியாக ஆய்வு செய்து தீா்வு காண வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு தில்லி தலைமைச்செயலா் அறிவுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.