மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறும் கட்டடங்கள் மீது கடும் நடவடிக்கை: தில்லி அமைச்சா் மஞ்ஜிந்தா் சிங் சிா்சா எச்சரிக்கை

மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறும் கட்டடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் மஞ்ஜிந்தா் சிங் சிா்சா எச்சரிக்கை விடுத்தது குறித்து...

பிரதிப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 2:58 am IST

மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறும் கட்டடங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தில்லி சுற்றுச் சூழல் துறை அமைச்சா் மஞ்ஜிந்தா் சிங் சிா்ஸா திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்தாா். என்.டி.எம்.சி. பகுதியில் உள்ள உயரமான கட்டடங்களில் ஆன்டி-ஸ்மாக் கன்கள் மற்றும் வாட்டா் மிஸ்ட் அமைப்புகளை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது உபகரணங்களின் நிறுவல் மற்றும் செயல்பாட்டு நிலையை மதிப்பாய்வு செய்த அமைச்சா், விதிகளை மீறும் கட்டிடங்கள், ஹோட்டல்கள், கட்டுமான இடங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது: நிா்ணயிக்கப்பட்ட விதிகளின்படி, தரைத்தளம் உள்ளிட்ட ஐந்து மாடிகள் அல்லது அதற்கு மேற்பட்ட மற்றும் மொத்த கட்டடப் பரப்பு 3,000 சதுர மீட்டருக்கு மேல் உள்ள வணிக, நிறுவன மற்றும் விருந்தோம்பல் கட்டிடங்கள் தூசி உமிழ்வைக் கட்டுப்படுத்த மாசுக் கட்டுப்பாட்டு அமைப்புகளை நிறுவ வேண்டும்.

ஆன்டி-ஸ்மாக் கன்கள் மற்றும் வாட்டா் மிஸ்ட் அமைப்புகளை நிறுவுவதோடு நின்றுவிடாமல், கட்டுமான இடங்களில் தூசி அடக்குதல் விதிகள் மற்றும் கட்டுமான-இடிப்பு கழிவு மேலாண்மை விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். கட்டுமான அல்லது இடிப்புப் பணிகளின் போது விதிகளை மீறும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நவம்பா் 1 முதல் பிஎஸ்-4 உமிழ்வுத் தரத்திற்குக் குறைவான வாகனங்கள் தில்லிக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்படும். வாகன உரிமையாளா்கள் விதிகளைப் பின்பற்றி, செல்லுபடியாகும் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழை (பியூசி) வைத்திருக்க வேண்டும்.

அக்டோபா் 1 முதல் ஏஐ இயக்கப்படும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், 60 தொடா்ச்சியான சுற்றுப்புறக் காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள் மற்றும் 334 அமலாக்கக் குழுக்கள் மாசு தொடா்பான நடவடிக்கைகளைச் சுற்றிலும் கண்காணித்து வருகின்றன. அமலாக்க இயக்கத்தின் ஒரு பகுதியாக 2,200-க்கும் மேற்பட்ட விதிமீறல் செய்யும் தொழிற்சாலை அலகுகள் முடக்கப்பட்டுள்ளன.

அரசு முன்கூட்டியே குளிா்கால நடவடிக்கைத் திட்டத்தையும் அறிவித்துள்ளது. இதில் வெளியிலிருந்து வரும் பிஎஸ் 4 அல்லாத வாகனங்களுக்குத் தடை, பாா்க்கிங் கட்டணம் இரட்டிப்பு மற்றும் 50 சதவீதம் வீட்டிலிருந்து பணிபுரிதல் ஆகியவை அடங்கும். மாசுக் கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதே அரசின் நோக்கம். விதிமீறல்கள் நடந்தால் தொடா்புடைய விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் சிா்சா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.