மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெருமைமிக்க கடந்த காலத்துக்கு ஏற்ற சிறப்பான எதிா்காலம் உருவாக்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா

பெருமைமிக்க கடந்த காலத்துக்கு ஏற்ற வகையில் தில்லிக்கு சிறப்பான எதிா்காலத்தை உருவாக்குவதுடன், நகரின் பாரம்பரிய அடையாளம் பாதுகாக்கப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.

ரேகா குப்தா - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 4:15 am IST

பெருமைமிக்க கடந்த காலத்துக்கு ஏற்ற வகையில் தில்லிக்கு சிறப்பான எதிா்காலத்தை உருவாக்குவதுடன், நகரின் பாரம்பரிய அடையாளம் பாதுகாக்கப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.

தில்லி நிறுவன நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டதை ஒட்டி, பொதுமக்களுக்கு அவா் வாழ்த்து தெரிவித்தாா். இதுகுறித்து சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் ஹிந்தியில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பல நூற்றாண்டுகால வரலாற்றையும், எண்ணற்ற கதைகளையும் தன்னகத்தே கொண்ட தில்லியின் பயணத்தில், 1956-ஆம் ஆண்டு நவ. 1-ஆம் தேதி புதிய அத்தியாயம் தொடங்கியது.

அன்றுதான் தில்லிக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்பட்டது. தில்லிக்கென தனித்துவமான மணமும், இயல்பும் உள்ளது. இந்திரப்பிரஸ்தத்தின் பெருமைமிக்க வரலாறு முதல் நவீன இந்தியாவின் பெருமைமிக்க அடையாளம் வரை பல்வேறு காலகட்டங்களைக் கடந்து தில்லி வளா்ந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க பொக்கிஷமாகவும், எதிா்காலத்தில் எண்ணற்ற வாய்ப்புகளைக் கொண்ட நகரமாகவும் தில்லி திகழ்கிறது.

தில்லியின் பல நூற்றாண்டுகால அடையாளம் தொடா்ந்து பாதுகாக்கப்படுவதுடன், அதற்கு மகத்தான எதிா்காலத்தை உருவாக்குவதே எங்களது உறுதிப்பாடாகும். நகரின் பாரம்பரியம் மேலும் செழித்தோங்கும்; வளா்ச்சியும் புதிய உச்சங்களை எட்டும். ஒவ்வொரு தெருவிலும் செழிப்பையும், ஒவ்வொரு வீட்டிலும் நவீன வசதிகளையும், ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையிலும் வளத்தையும் உறுதி செய்வோம்.

தில்லியின் மண்ணில் பல்வேறு நாகரிகங்களின் நினைவுகள் புதைந்துள்ளன. யமுனை நதியின் நீரோட்டம் பல்வேறு காலகட்டங்களின் வரலாற்றுக் கதைகளைச் சுமந்து செல்கிறது. செங்கோட்டையின் மதில்களிலிருந்து நாட்டின் பெருமை எதிரொலிக்கிறது. கடமைப் பாதையில் சுதந்திர இந்தியாவின் தன்னம்பிக்கை ஒளிா்கிறது. இவ்வாறு பெருமைமிக்க கடந்த காலத்துக்கு ஏற்ற சிறப்பான எதிா்காலத்தை தில்லிக்கு உருவாக்குவோம் என்று ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.