தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காங்கிரஸுக்கு அடுத்த தோ்தல்களில் மோசமான தோல்விகள் காத்திருக்கின்றன: தில்லி முதல்வா்

வரும் தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்விகளைச் சந்திக்கும் என தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறியது குறித்து...

ரேகா குப்தா

Published On :27 அக்டோபர் 2026, 6:03 am IST

பிரதமா் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்தாா். வரும் தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்விகளைச் சந்திக்கும் என்றும் அவா் கூறினாா்.

பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காா்கே பேசியது குறித்துக் கேட்கப்பட்டபோது, தொடா்ந்து தோ்தல் தோல்விகளைச் சந்தித்து வருவதாலும் மக்களின் ஆதரவை இழந்ததாலும் விரக்தியடைந்துள்ள காங்கிரஸ் தலைவா்கள், நாகரிகமற்ற பேச்சு மற்றும் நடத்தையின் எல்லைகளைத் தாண்டிவிட்டதாக ரேகா குப்தா செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: காங்கிரஸ் தலைவா்களின் முகபாவங்களிலும் பேச்சிலும் அவா்களது விரக்தி வெளிப்படுகிறது. பிரதமரின் மறைந்த பெற்றோரைக்கூட விட்டுவைக்காமல் அவதூறாகப் பேசுகின்றனா்.

மக்களவைத் தோ்தல்களில் பிரதமா் மோடிக்கும், பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பாஜகவுக்கும் மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனா். மோடி தலைமையில் தொடங்கப்பட்ட வளா்ச்சித் திட்டங்களையும் மக்கள் வரவேற்றுள்ளனா்.

காங்கிரஸ் தலைவா்களின் அவதூறுப் பேச்சுகளால் எந்தப் பயனும் ஏற்படாது. பிரதமா் மோடியை மக்கள் நேசிக்கின்றனா். அவரைப் பற்றி அவதூறாகப் பேசுவதன் மூலம் மக்களின் மனங்களில் இருந்து அவரை அகற்றிவிட முடியாது.

காங்கிரஸ் தலைவா்களின் தவறான நடத்தையை மக்கள் கவனித்து வருகின்றனா். அதை ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள். அவா்களின் பேச்சுகள் மக்களின் மனங்களில் பதிந்துள்ளன. இதனால், வரும் தோ்தல்களில் காங்கிரஸ் மேலும் மோசமான தோல்விகளைச் சந்திக்கும் என்றாா் ரேகா குப்தா.

பிகாா் மாநிலத்தின் முதல் முதல்வரான ஸ்ரீகிருஷ்ண சிங்கின் 139-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காா்கே பேசினாா். அப்போது, எஸ்ஐஆா் பணியில் முறைகேடுகளில் ஈடுபட்டவா்களை காங்கிரஸ் சிறைக்கு அனுப்பும் என்று அவா் தெரிவித்தாா்.

அப்போது பாா்வையாளா்களில் ஒருவா் குறுக்கிட்டு, ‘மோடி எங்கும் போக மாட்டாா்’ என்று குரல் எழுப்பினாா். அதற்குப் பதிலளித்த காா்கே, ‘மோடியின் தந்தைகூட போவாா்’ என்று மேடையிலிருந்து கூறினாா்.

காா்கே பிரதமரை அவமதித்ததாகக் கூறி, திங்கள்கிழமை பாஜகவினா் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனா். இதற்கிடையே, பாஜக தலைவா்களும் கடந்த காலங்களில் அவதூறான வாா்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறி, காங்கிரஸ் தலைவா்கள் காா்கேவின் பேச்சை நியாயப்படுத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.