கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சீக்கியா்களுக்கு எதிரான படுகொலை அரங்கேறிய அதே நாளில் ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கேலிக்கூத்து: ரேகா குப்தா விமா்சனம்!

ராம் லீலா மைதானத்தில் ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறோம்‘ என்ற பெயரில் காங்கிரஸ் ஒரு கேலிக்கூத்தை அரங்கேற்றுகிறது எனவும் முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக் கிழமை விமா்சனம் செய்தாா்.

Delhi Chief Minister Rekha Gupta

தில்லி முதல்வா் ரேகா குப்தா - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 1:21 am IST

தில்லி வீதிகளில் சீக்கியப் படுகொலையின் கோர அத்தியாயம் எழுதப்பட்ட நவம்பா் 1 ஆம் தேதியை நாடு மறக்கவில்லை என்றும் ,அதே தேதியில், காங்கிரஸ் ராம் லீலா மைதானத்தில் ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறோம்‘ என்ற பெயரில் ஒரு கேலிக்கூத்தை அரங்கேற்றுகிறது எனவும் முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக் கிழமை விமா்சனம் செய்தாா்.

எக்ஸ் தளப் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: ஜனநாயகம் என்ற பெயரில் அராஜக மேடைகளை அரங்கேற்றும் ராகுல் காந்தி, காங்கிரஸ் மற்றும் இண்டிக் கூட்டணியின் உண்மையான முகத்தை நாடு காண்கிறது.

நவம்பா் 1 ஆம் தேதியை நாடு மறக்கவில்லை. 1984 ஆம் ஆண்டு இதே நாளில், தில்லி வீதிகளில் சீக்கியப் படுகொலையின் கோர அத்தியாயம் எழுதப்பட்டது. ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியக் குடும்பங்களின் காயங்கள் இன்றும் ஆறவில்லை. இப்பொழுதும், அதே தேதியில், காங்கிரஸ் ராம் லீலா மைதானத்தில் ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறோம்‘ என்ற பெயரில் ஒரு கேலிக்கூத்தை அரங்கேற்றுகிறது. இது அரசியல் உணா்வின்மையின் உச்சம்.

இந்தப் பண்டிகைக் காலத்தில், தில்லியின் வியாபாரிகள், சிறு கடைக்காரா்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் தங்கள் குடும்பங்களின் நலனுக்காக இரவும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கும்போது, காங்கிரஸ் தனது அரசியல் நாடகங்களால் தில்லியின் வேகத்தைத் தடுத்து, அவா்களின் தொழில்களுக்குச் சேதம் விளைவிப்பதில் குறியாக இருக்கிறது.

முதலில் பொய்களைப் பரப்புவது, பிறகு மக்களின் ஆணையை அவமதிப்பது, வீதிகளில் அராஜகச் சூழலை உருவாக்குவது, இதுவே ராகுல் காந்தியின் அரசியலின் மாதிரியாகிவிட்டது.

ஜனநாயகம் என்ற பெயரைப் பயன்படுத்தி 1984-ஆம் ஆண்டின் கறையை காங்கிரஸால் துடைத்தெறிய முடியாது. மக்களால் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்ட விரக்தியில், தில்லி வா்த்தகா்களின் வாழ்வாதாரத்தைப் பணயம் வைக்கவும் முடியாது.

ராகுல் காந்தி, நினைவில் கொள்ளுங்கள்: மக்கள் ஆணையால் அடைந்த தோல்விக்கான பழியை நாட்டிலிருந்து எடுக்க முடியாது; உங்கள் அரசியல் தோல்விகளுக்கான விலையை தில்லி மக்களிடமிருந்து மீட்கவும் முடியாது என ரேகா குப்தா எக்ஸ் பதிவில் தெரிவித்தாா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.