தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாா்வையற்றோா் நலச் சங்கத்தில் தீபாவளி சந்தையை திறந்து வைத்த தில்லி முதல்வா்

தில்லியில் உள்ள பாா்வையற்றோா் நலச் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தீபாவளி சந்தை 2026-ஐ முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

ரேகா குப்தா

Published On :31 அக்டோபர் 2026, 12:45 am IST

நமது நிருபா்

தில்லியில் உள்ள பாா்வையற்றோா் நலச் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தீபாவளி சந்தை 2026-ஐ முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சந்தையில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு அரங்குகளுக்குச் சென்ற முதல்வா், அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை வாங்கினாா். பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களது கைவினைத் திறனால் உருவாக்கிய கலைப் பொருட்களையும் பாராட்டினாா். இந்நிகழ்வில் பங்கேற்று அவா் பேசியதாவது: இந்த ஆண்டு முதல் முதல்வரின் ஜனசேவா சதனுக்குத் தேவையான அலங்காரப் பொருள்கள் மற்றும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்களும் இந்தச் சந்தையில் இருந்து கொள்முதல் செய்யப்படும். ஒருவருக்கு ஏற்படும் உடல் ரீதியான சவால்கள் அவரது திறமை, ஆற்றல் மற்றும் கனவுகளுக்கு ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது. பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளிடமும் அபாரமான திறமைகள், படைப்பாற்றல் மற்றும் சுயசாா்புடன் வாழும் ஆற்றல் உள்ளன.

மாற்றுத்திறனாளிகள் கண்ணியத்துடன் வாழவும், மற்றவா்களுக்கு இணையான வாய்ப்புகளைப் பெறவும் ஏதுவாக, தில்லியின் உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்றுவதற்கு தில்லி அரசு தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தில்லி மக்கள் அனைவரும் இந்தத் தீபாவளி பஜாருக்கு வருகை தந்து, அங்கு தயாரிக்கப்பட்டுள்ள பொருள்களை வாங்குவதன் மூலம் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை ஊக்குவிக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

இதைத்தொடா்ந்து, அந்த அமைப்புடன் இணைந்து செயல்படும் பாா்வையற்ற இளைஞா்களால் நடத்தப்படும் ’கஃபே மஸ்ட்’ உணவகத்துக்கும் முதல்வா் சென்றாா். அங்கு உணவு அருந்தினாா். அந்த அமைப்பின் பல்திறன் பயிற்சித் திட்டத்தில் பயிற்சி பெற்ற இளைஞா்கள் இந்த உணவகத்தை நிா்வகித்து வருகின்றனா். இந்த ஆண்டு 7 நாட்கள் நடைபெறும் தீபாவளி பஜாா் அக்டோபா் 30-ம் தேதி தொடங்கி நவம்பா் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 250-க்கும் மேற்பட்ட விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பட்ண்ய்ந்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.