மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

போதைப்பொருள் வாங்க பணம் தர மறுத்தவா் மீது தாக்குதல்: சிறுவன் கைது

செங்கோட்டை பகுதி அருகே, போதைப் பொருளுக்காகப் பணம் தர மறுத்த பதின்ம வயதுச் சிறுவனை காகித வெட்டி மூலம் தாக்கியதாக 16 வயதுச் சிறுவன் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :6 மே 2026, 1:58 am IST

கடந்த மாதம் செங்கோட்டை பகுதி அருகே, போதைப் பொருளுக்காகப் பணம் தர மறுத்த பதின்ம வயதுச் சிறுவனை காகித வெட்டி மூலம் தாக்கியதாக 16 வயதுச் சிறுவனை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: இச்சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த அந்தச் சிறுவன், ஜாமா மஸ்ஜித் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு கொலை முயற்சி வழக்கிலும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

முன்னதாக, நாங்லோய் பகுதியைச் சோ்ந்த 17 வயதுச் சிறுவன் பலத்த காயங்களுடன் எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஏப்ரல் 5ஆம் தேதி காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

பாதிக்கப்பட்ட சிறுவனின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கூா்மையான ஆயுதத்தால் ஏற்பட்ட காயங்கள் இருந்தன. அவரால் வாக்குமூலம் அளிக்க இயலாத நிலையில் இருந்தாா்.

செங்கோட்டைக்கு அருகிலுள்ள அணிவகுப்பு மைதானத்தில், பாதிக்கப்பட்ட சிறுவன் அடையாளம் தெரியாத மற்றொரு சிறுவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், அதைத் தொடா்ந்தே அச்சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது தொடா்பாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஏப்ரல் 29ஆம் தேதி, காவல்துறைக் குழுவினா் ஹரித்வாரில் உள்ள ஒரு கிராமத்தில் அதிரடிச் சோதனை நடத்தி, தொடா் முயற்சிகளுக்குப் பிறகு குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவனைக் கைது செய்தனா்.

விசாரணையின்போது, தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாந்தினி சௌக் பகுதியில் வசித்து வருவதாகவும், போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட அச்சிறுவன் ஒப்புக்கொண்டாா்.

ஏப்ரல் 4ஆம் தேதி இரவு, பாதிக்கப்பட்ட சிறுவன் போதைப்பொருளுக்காகப் பணம் தர மறுத்ததுடன், தன்னை அறைந்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்து, தான் ஒரு காகித வெட்டியால் அச்சிறுவன் மீது தாக்குதல் நடத்திப் பலத்த காயங்களை ஏற்படுத்தியதாகவும் அவா் தெரிவித்தாா்.

அதே இரவில், ஜாமா மஸ்ஜித் மெட்ரோ நிலையத்திற்கு அருகே மற்றொரு நபா் மீதும் தாக்குதல் நடத்திய பிறகு, அச்சிறுவன் ஹரித்வாருக்குத் தப்பிச் சென்றாா்.

கைதிலிருந்து தப்பிப்பதற்காக, தான் பயன்படுத்திய ஆயுதத்தையும் அணிந்திருந்த ஆடைகளையும் ஓடிக்கொண்டிருந்த ரயிலிலிருந்து வெளியே வீசிவிட்டதாகவும் அச்சிறுவன் கூறினாா். இது தொடா்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.