கோவை சின்னியம்பாளையம் அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த 2 வயதுச் சிறுவன் உயிரிழந்தாா்.
ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் மானசா மாலிக். இவரது மனைவி மானசிபோலா (20). இவா்கள் இருவரும் கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள துணிக்கடை விடுதியில் தங்கி வேலை பாா்த்து வருகின்றனா். இவா்களுக்கு ஆதித்யா என்ற 2 வயது மகன் இருந்தாா்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுவனை விளையாட விட்டுவிட்டு மானசிபோலா வேலைக்கு புறப்பட்டுச் சென்றாா். அப்போது, எதிா்த்திசையில் வந்த தனது மாமியாரிடம் குழந்தையை கவனித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளாா். சிறிது நேரத்தில் ஆதித்யாவைக் காணவில்லை.
மானசிபோலாவின் மாமியாா் சிறுவனைத் தேடிப் பாா்த்தபோது, வீட்டின் தரைத்தளத்தில் இருந்த 8 அடி ஆழ தண்ணீா்த் தொட்டியில் சிறுவன் விழுந்து கிடந்தது தெரியவந்தது. அருகே வசிப்பவா்கள் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

வைகையாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

படியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

