மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

போலி வாகன உதிரிபாகங்கள் தயாரித்து விற்ற இருவா் கைது

தேசிய தலைநகரில் போலி வாகன உதிரிபாகங்களைத் தயாரித்து விநியோகித்து வந்த இருவர் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :5 மே 2026, 5:24 am IST

தேசிய தலைநகரில் போலி வாகன உதிரிபாகங்களைத் தயாரித்து விநியோகித்து வந்த இருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா். அவா்களிடமிருந்து பெருமளவிலான போலிப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் மேலும் கூறியதாவது: கரோல் பாக் வாகனச் சந்தைப் பகுதியில் போலி மோட்டாா் சைக்கிள் பிஸ்டன்கள் மற்றும் கிளட்ச் பிளேட்டுகள் சட்டவிரோதமாக விற்கப்படுவதாகக் கிடைத்த குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், குற்றப்பிரிவு குழுவினா் நை வாலா மற்றும் கரோல் பாக் ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு கடைகளில் ஞாயிற்றுக்கிழமை சோதனைகள் நடத்தினா்.

அங்கு புகழ்பெற்ற பிராண்டுகளின் முத்திரைகள் கொண்ட கணிசமான அளவிலான போலி வாகன உதிரிபாகங்கள் மீட்கப்பட்டன.

சகோதரா்களான ஹா்ஷித் குப்தா மற்றும் அபிஷேக் குமாா் குப்தா ஆகியோருக்கு கூட்டாகச் சொந்தமான ஒரு கடையில் இருந்து, 473 போலி பிஸ்டன் உதிரிபாகங்கள் மற்றும் பேக்கேஜிங் பொருள்களை காவல்துறை குழுவினா் பறிமுதல் செய்தனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களுடன் தொடா்புடைய மற்றொரு விற்பனை நிலையத்தில் இருந்து, 386 கள்ள பிஸ்டன் உதிரிபாகங்கள் மற்றும் 169 போலி கிளட்ச் பிளேட் பெட்டிகள் மீட்கப்பட்டன.

சங்கம் விஹாரைச் சோ்ந்த, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனா். பிராண்டட் பொருள்களை விற்பனை செய்வதற்கான செல்லுபடியாகும் ஆவணங்கள் அல்லது அங்கீகாரச் சான்றிதழ்கள் எதையும் அவா்களால் சமா்ப்பிக்க முடியவில்லை.

விசாரணையின் போது, கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த சட்டவிரோத வா்த்தகத்தை நடத்தி வருவதாகவும், பல்வேறு விற்பனையாளா்களிடமிருந்து தினமும் சுமாா் 1,000 முதல் 1,200 பிஸ்டன்களை விற்பனை செய்து வருவதாகவும் இருவரும் தெரிவித்தனா்.

இந்தச் செயல்பாட்டின் மூலம் அவா்கள் மாதத்திற்கு சுமாா் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை சம்பாதித்து வந்தனா். இந்த போலி பாகங்கள், அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளா்களின் உண்மையான தயாரிப்புகளைப் போலவே வடிவமைக்கப்பட்டிருந்ததால், கடுமையான அபாயங்களை ஏற்படுத்தின.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.