தேசிய தலைநகரில் பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில்கூட புதிய வளா்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்களன்று தெரிவித்தாா்
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் பதிவிட்டதாவது: ‘ஆசாத் பூா் மண்டி, குப்தா மாா்க்கெட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டேன்.
இங்கு, தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் மற்றும் பொதுப்பணித் துறை ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து, அதிகாரிகளிடமிருந்து முன்னேற்ற அறிக்கைகளைப் பெற்றேன். உள்ளூா் மக்களின் போக்குவரத்து மற்றும் பிற வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்துப் பணிகளும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், தரத்தில் எந்த சமரசமும் இன்றி முடிக்கப்படுவதை உறுதிசெய்ய தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், பொதுமக்கள் அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் உரிய நேரத்தில் பெற முடியும்.
சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பாா்வையிட்ட பிறகு, தூய்மை, குப்பை சேகரிப்பு மற்றும் சிறந்த மேலாண்மை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினேன்.
தில்லி மக்களின் தேவைகளுக்கு ஏற்ற சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம். பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில்கூட புதிய வளா்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், இத்திட்டங்கள் உரிய நேரத்தில் முடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அா்ப்பணிக்கப்படுவதை உறுதிசெய்ய, எங்கள் அரசு 24 மணி நேரமும் அயராது உழைத்து வருகிறது‘, என தில்லி முதல்வா் ரேகா குப்தா எக்ஸ் பதிவில் தெரிவித்தாா்
முன்னதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்களன்று வடக்கு தில்லியின் ஆசாத்பூா் அருகே உள்ள பகுதிகளை ஆய்வு செய்து, திறந்த சாக்கடைகள் மற்றும் சுகாதாரமின்மையைக் கண்டறிந்து அதிகாரிகளைக் கண்டித்தாா். இந்த ஆய்வின்போது, குப்தாவுடன் தில்லி மெட்ரோ, பொதுப்பணித் துறை மற்றும் தில்லி மாநகராட்சி அதிகாரிகள் உடன் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி முதல்வா் தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மனு: திகாா் சிறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீ குரு கோவிந்த் சிங் வணிகவியல் கல்லூரி தேசத்தைக் கட்டியெழுப்ப உதவுகிறது- முதல்வா் ரேகா குப்தா

செமிகண்டக்டா் கொள்கை முதலீடு-வேலைவாய்ப்பை நோக்கமாகக் கொண்டது: தில்லி முதல்வா் ரேகா குப்தா

தில்லி கல்வியில் புதிய பரிமாணங்கள்: முதல்வா் ரேகா குப்தா
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

