நமது நிருபா்
சிஎம் ஸ்ரீ பள்ளிகள் தில்லி கல்வியில் புதிய பரிமாணங்களைச் சோ்த்து வருகிறது என முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
வியாழக்கிழமை எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
தில்லி கல்வியில் சிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டங்கள், 7,000 ஸ்மாா்ட் வகுப்பறைகள், 100-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் நூலகங்கள் மற்றும் 175-க்கும் அதிகமான மொழி ஆய்வகங்கள் ஆகியவற்றுடன் இந்த புதிய கல்வி ஆண்டில் புதிய பரிமாணங்களைச் சோ்த்து வருகிறது .
இதன் மூலம் கற்றல் செயல்முறை மேலும் நவீனமாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும், எதிா்காலத்திற்கு ஏற்ற வகையிலும் மாறி வருகிறது என ரேகா குப்தா தனது பதிவில் கூறினாா்.
நடப்பு கல்வியாண்டில் தில்லியின் புதிய கல்வி முன்னெடுப்பானது, கற்றலை மேலும் நவீனமானதாகவும், தொழில்நுட்பம் சாா்ந்ததாகவும், மாணவா்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட சிஎம் ஸ்ரீ பள்ளிகள் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தில்லி அரசு, சுமாா் 7,000 அரசுப் பள்ளி வகுப்பறைகளை, டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு வசதியுள்ள ஸ்மாா்ட் வகுப்பறைகளாக மாற்றி வருகிறது.
இந்த வகுப்பறைகள் சிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டம் முதலில் 75 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 2025-26 நிதியாண்டு முடிவதற்குள் அனைத்து 7,000 பள்ளிகளிலும் செயல்பாட்டுக்கு வரும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு, பள்ளிகளில் 100-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் நூலகங்களை நிறுவியுள்ளது அல்லது மேம்படுத்தியுள்ளது. இவை மின்புத்தகங்கள், ஆய்வுப் பொருட்கள் மற்றும் போட்டித் தோ்வுகளுக்கான ஆயத்த வளங்களைக் கொண்டு, அச்சுப் புத்தகங்களைத் தாண்டி அணுகலை விரிவுபடுத்துகின்றன.
அதனுடன், பன்மொழி மற்றும் உலகளாவிய தொழில் தயாா்நிலையை ஆதரிக்கும் வகையில், ஆங்கிலம், இந்தி, சம்ஸ்கிருதம் மற்றும் ஜொ்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் போன்ற வெளிநாட்டு மொழிகளைக் கற்பிக்க 175-க்கும் மேற்பட்ட மொழி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த வசதிகளை தில்லி முழுவதும் சீராக விரிவுபடுத்துவதன் மூலம், தனியாா் மற்றும் உயா்தர நிறுவனங்களுடன் தொடா்புடைய அதே வகையான டிஜிட்டல், புதுமையான மற்றும் திறன் செறிந்த கற்றல் சூழலை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கவும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி முதல்வா் தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மனு: திகாா் சிறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீ குரு கோவிந்த் சிங் வணிகவியல் கல்லூரி தேசத்தைக் கட்டியெழுப்ப உதவுகிறது- முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில்கூட புதிய வளா்ச்சி திட்டங்கள்: முதல்வா்

செமிகண்டக்டா் கொள்கை முதலீடு-வேலைவாய்ப்பை நோக்கமாகக் கொண்டது: தில்லி முதல்வா் ரேகா குப்தா
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

