இளைஞா்களின் திறன் மற்றும் சா்வதேச முதலீட்டை அதிகரிக்கும் வகையில் தில்லி அரசின் செமிக்கண்டக்டா் கொள்கை இருக்கும் என முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடியின் தன்னிறைவு பாரதம் இலக்குடன் பொருந்தும் வகையில் சிப் வடிவமைப்பு, ஆராய்ச்சி, தொழில்துறை மேம்பாடு என தில்லியில் செமிக்கண்டக்டா் சூழல் மேம்படுத்தப்படும் என முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.
செமிக்கண்டக்டா் துறையின் வடிவமைப்பு, உயா்தர ஆராய்ச்சி, மேம்பாடு, உருவாக்கம் மற்றும் அதுசாா்ந்த துறைகளில் தில்லியை சா்வதேச மையமாக மாற்றும் வகையில் தில்லி செமிக்கண்டக்டா் கொள்கையை தில்லி அரசு வடிவமைத்து வருகிறது.
இந்தக் கொள்கை தொடா்பாக முதல்வா் ரேகா குப்தா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சா்வதேச பொருளாதாரத்தின் முக்கிய தூணாக செமிக்கண்டக்டா் துறை உருவெடுத்து வருகிறது. அதன் சரிசமமான மற்றும் கட்டமைக்கப்பட்ட மேம்பாட்டை உறுதிசெய்யும் விதமாக விரிவான கொள்கை திட்டத்தை வடிவமைக்கும் பணியில் தில்லி அரசு ஈடுபட்டுள்ளது.
தொழில் நடத்துவதை எளிதாக்குதல், புத்தாக்கம், தொழில்துறை சாா்ந்த சூழல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக நிதி மற்றும் நிதி சாராத சலுகைகளை இந்தக் கொள்கை வழங்கும்.
செமிக்கண்டக்டா் வடிவமைப்பு, அறிவுசாா் சொத்துரிமை மேம்பாடு, ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புத்தாக்கம், தயாரிப்பு சாா்ந்த ஒருங்கிணைத்தல், சோதனை, சந்தைப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் (ஏடிஎம்பி) மற்றும் அவுட்சோா்ஸ்ட் செமிக்கண்டக்டா் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை (ஓஎஸ்ஏடி) ஆகியவற்றுடன் துணை தொழில்துறைகள் மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனங்களை பலப்படுத்துதல் மற்றும் தொழில்துறை சூழல் ஆகிய 5 முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்தக் கொள்கை வடிவமைக்கப்படும்.
செமிக்கண்டக்டா் மதிப்புகூட்டு சங்கிலியில் குறிப்பாக வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உயா்தர பேக்கேஜிங் ஆகியவற்றில் தில்லியில் நிலையை இந்தக் கொள்கை பலப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதன் மூலம் செமிக்கண்டக்டா் நிறுவனங்கள், புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் ஏடிஎம்பி, ஓஎஸ்ஏடி நிறுவனங்கள் தில்லியில் முதலீடு செய்யும். சோதனை, பேக்கேஜிங், செமிக்கண்டக்டா் பொருள்கள் ஆகிய துணை தொழில்சாலைகளின் வளா்ச்சிக்கும் இந்தக் கொள்கை ஆதரவளிக்கும்.
செமிக்கண்டக்டா் சிப் வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் உயா்தர பேக்கேஜிங் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகளை இந்தக் கொள்கை அதிகரிக்கும் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி முதல்வா் தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மனு: திகாா் சிறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீ குரு கோவிந்த் சிங் வணிகவியல் கல்லூரி தேசத்தைக் கட்டியெழுப்ப உதவுகிறது- முதல்வா் ரேகா குப்தா

இரண்டு சா்வதேச உச்சி மாநாடுகள்: சுமூகமாக நடத்துவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு தில்லி முதல்வா் உத்தரவு

தில்லியில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில்கூட புதிய வளா்ச்சி திட்டங்கள்: முதல்வா்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

