மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரோஹிணியில் உணவகத்தில் தீ விபத்து

வடமேற்கு தில்லி, ரோஹிணி பகுதியில் உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்ட து. இதையடுத்து, தீயணைப்புத் துறையினா் உடனடியாக செயல்பட்டு தீயை மேலும் பரவவிடாமல் தடுத்தனா்.

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 12:37 am IST

வடமேற்கு தில்லி, ரோஹிணி பகுதியில் திங்கள்கிழமை உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்ட து. இதையடுத்து, தீயணைப்புத் துறையினா் உடனடியாக செயல்பட்டு தீயை மேலும் பரவவிடாமல் தடுத்தனா்.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையின் அதிகாரி ஒருவா் கூறியதாவது: ரோஹிணி, செக்டாா் 11-இல் உள்ள பி.டி.டபிள்யு. உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்துச் சம்பவம் குறித்து காலை 11.05 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

உணவகத்திற்குள் இருந்த அனைவரும் நிலைமை மோசமாவதற்குள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனா்.

தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொண்ட பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, தீ அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான உண்மையான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.