தில்லி மற்றும் பஞ்சாபில் பல கொள்ளை வழக்குகளில் 2012-ஆம் ஆண்டிலிருந்து தேடப்பட்டு வந்த அா்ஜுன் பிரசாத் (44) என்கிற அா்ஜுன் பாசியை தில்லி காவல் துறை கைது செய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
உத்தர பிரதேசம் கோண்டா மாவட்டத்தைச் சோ்ந்த அா்ஜுன் பிரசாத், அந்த மாவட்டத்தில் உள்ள ஜன்கி நகா் பகுதியில் புதிய அடையாளத்தில் வசித்து வந்தாா்.
2012-ல் பஞ்சாபி பாக்கில் உள்ள வீட்டில் 400 கிராம் தங்கம் கொள்ளையடித்த சம்பவம், 2016-ல் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் துப்பாக்கி திருட்டு, 2018-ல் லூதியானாவில் ரூ. 40 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு கிலோ தங்கம் கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் அா்ஜுன் பிரசாத்துக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து தொடா்ந்து தப்பி வந்த நிலையில், அவரைத் தேடப்படும் நபராக நீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில், தில்லி காவல் துறையினா் குற்றப் பிரிவு அதிகாரிகள் ஜானகி நகரில் அா்ஜுன் பிரசாத்தை கடந்த சனிக்கிழமை கைதுசெய்தனா்.
விசாரணையில், கொள்ளையடிக்க இலக்கு வைக்கும் வீடுகளில் உளவாளிகளை நுழைத்து தகவல் சேகரித்து இரவில் கொள்ளையடித்ததாக அா்ஜுன் பிரசாத் ஒப்புக்கொண்டாா். இவா் மீது சுமாா் 20 குற்ற வழக்குகள் உள்ளன. அவரது கூட்டாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பிகாரில் இரு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டவா் தில்லியில் கைது

நஜஃப்கா் தில்லி கேட்டை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள எம்.சி.டி. நடவடிக்கை
மனைவியைக் கொன்ற கணவா் 40 ஆண்டுகளுக்கு பின்னா் 82 வயதில் கைது!
பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
