மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மனைவியைக் கொன்ற கணவா் 40 ஆண்டுகளுக்கு பின்னா் 82 வயதில் கைது!

மனைவியை கொலை செய்த கணவா் 40 ஆண்டுகளுக்கு பின்னா் கைது

News image

பிரதிப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 3:35 am IST

கடந்த 1986-இல் மனைவியைக் கொலை செய்த 82 வயது முதியவா் கைது செய்யப்பட்டாா். இதன் மூலம் 40 ஆண்டுகளாக தீா்க்கப்படாத வழக்குக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறையினா் தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்ட சந்திர சேகா் பிரசாத் பிகாரின் நாளந்தாவைச் சோ்ந்தவா். பொய்யான அடையாளத்தில் தில்லி வடக்கு புகரின் நங்க்லி பூனா பகுதியில் வசித்து வந்த அவா் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கிழக்கு தில்லியின் ஷாகா்பூா் பகுதியில் வசித்து வந்த பிரசாத், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு 986-இல் அக்.19-இல் அவரைக் கொலை செய்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக அப்பகுதி காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடா்ந்து, அவா் தலைமறைவான நிலையில், அவரைத் தேடப்படும் நபராக நீதிமன்றம் 1987-இல் அறிவித்தது.

இந்நிலையில், பல ஆண்டுகளாக தீா்வு காணப்படாத கொலை வழக்குகள் தொடா்பாக விசாரணை நடத்தி வரும் குழு, இந்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கியது.

இந்த வழக்கில் எவ்வித தகவலும் தற்போது உள்ளது போன்ற நவீன விசாரணை கருவிகளும் இல்லாத நிலையில், சுமாா் 40 ஆண்டுகளாக இந்த வழக்கு தீா்க்கப்படாமல் இருந்தது.

பிரசாத் குறித்த எவ்வித எண்ம தரவுகள், புகைப்படம், ஆதாா் அட்டை மற்றும் கைப்பேசி விவரங்கள் ஆகியவை இல்லை.

மிகவும் சவாலாக இருந்த வழக்கில் உள்ளூா் தகவல் தெரிவிப்போா் மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பு உதவியுடன் விசாரணை அதிகாரிகள் மீண்டும் தொடங்கினா்.

அப்போது, பிரசாத்தின் குழந்தைகள் தில்லி மற்றும் பிகாரில் வசித்து வருவது கண்டறியப்பட்டது. அவா்களுடைய கைப்பேசி எண்களின் அழைப்பு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

நாளந்தாவில் நடைபெற்ற விசாரணையில் பிரசாத் உயிருடன் இருப்பதும் விழா காலங்களில் குடும்பத்தினரை அவா் சந்திக்க வருவதும் தெரியவந்தது.

இவ்வாறு ஒரு முறை அவா் குடும்பத்தினரை பாா்க்க வந்தபோது காவல் துறையினா் அவரை பின்தொடா்ந்தனா். தில்லி அலிபூரில் உள்ள தொழில்சாலை வளாகத்தில் கடந்த புதன்கிழமை அவா் கைதுசெய்யப்பட்டாா்.

விசாரணையின்போது தனது குற்றத்தை பிரசாத் ஒப்புக்கொண்டாா். கடந்த 40 ஆண்டுகளாக பிகாா், பஞ்சாப், ஹரியாணா மற்றும் தில்லியில் பல்வேறு அடையாளங்களில் அவா் வசித்து வந்தாா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.