வணிக பயன்பாட்டிற்கான விலை உயர்வுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த மார்ச் மாதம் ரூ.144-ம், ஏப்ரல் மாதம் ரூ. 203-ம் உயர்த்தப்பட்ட நிலையில், மே 1 ஆம் தேதி மேலும் ரூ.933 உயர்த்தப்பட்டு ஒரு சிலிண்டர் ரூ.3,239 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க - ஈரான் போரால் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய பாஜக அரசு வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலையை ஒரேடியாக சுமார் ரூ.1000 அதிகரித்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
கடந்த இரண்டு மாதங்களாக சமையல் எரிவாயு விநியோகம் தடைப்பட்டதால் உணவகங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்ததுடன், உணவுப் பொருள்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துவிட்டது.
இந்த நிலையில், வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும். உடனடியாக மத்திய அரசு இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Summary
MDMK General Secretary Vaiko has condemned the price hike for commercial use...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிலிண்டர் விலை உயர்வு! விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மே 7-ல் ஆர்ப்பாட்டம்

ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! பெட்ரோல், டீசல் விலையும் உயரும்! ராகுல்

சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.3,237! அப்போ ஒரு டீ விலை?
கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர்: வைகோ
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


