சென்னை: வணிக சிலிண்டர் விலை ரூ.993 அளவுக்கு உயர்த்தப்பட்டு ஒரே ஒரு சிலிண்டர ரூ.3,237-க்கு விற்பனையாகும் நிலையில், ஒரு டீ விலை எந்த அளவுக்கு உயரும் என்று மக்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
சென்னையில் எங்குப்பார்த்தாலும் அடுப்பை எரிக்க உதவும் விறகுக் கட்டைகளுடன் குட்டியானை வண்டிகள் செல்வதைக் காண முடிகிறது, இந்த நிலையில், மே 1ஆம் தேதி வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக ரூ. 993 உயர்ந்து, ரூ. 3,237-க்கு விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுளள்து.
ஏற்கனவே சாலையோர உணவகங்கள் பலவும் மூடப்பட்டுவிட்டன. இருக்கும் ஓரிரு உணவகங்களிலும் தோசை கிடையாது, இட்லி கிடையாது என கைவிரித்துவிட்டன. பல இளைஞர்கள் நம்பியிருக்கும் உணவகங்களில் சப்பாத்தி, இடியாப்பம், தோசை மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.
தற்போது ஏற்றப்பட்டிருக்கும் சிலிண்டர் விலையும் நேரடியாக உணவகங்களில் விற்பனையாகும் உணவுப் பொருள்கள் மீதுதான் விழும். இரண்டு வேளை உணவருந்தியவர்கள் இனி ஒரு வேளைக்கே யோசிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். ஒரு டீயாவது குடித்து பசியாறியவர்கள் இனி ஒரு டீயா? அது எவ்வளவு என்று கேட்கும் நிலை உருவாகலாம் என சாதாரண தொழிலாளர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
சென்னை மற்றும் சென்னையை சுற்றியிருக்கும் பல பகுதிகளில் உணவகங்கள் வெகு நாளாக பூட்டப்பட்டிருக்கும் நிலையில், இயங்கி வரும் ஓரிரு உணவகங்களும் இன்னும் கொஞ்ச நாளில் மூடப்படும் என்ற அச்ச நிலை உருவாகியிருக்கிறது. உணவுப் பொருள்களை தயாரிக்கும் மளிகைப் பொருள்கள், காய்கறிகள் விலை அவ்வப்போது உயர்ந்து கண்ணைக் கட்டிவரும் நிலையில் தற்போது வணிக சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு உணவக தொழிலை பெருமளவில் ஆட்டங்கான வைக்கிறது. இதிலிருந்து உணவகங்கள் மீளுமா என்பது கேள்விக்குறியாகவும் மாறியிருக்கிறது.
கடைசியாக ஒரு தேநீரின் விலை என்னவாக இருக்கும் என்பது இன்று மாலை முதல் தெரிய வரும். ஏற்கனவே ரூ.15 முதல் ரூ.20 வரை தேநீர் விற்பனையாகிறது என்றால் அதில் 2 அல்லது 5 ரூபாய் ஏறுமா அல்லது ஒரேயடியாக ரூ.10 உயருமா என்பது தெரியவில்லை. எனினும் முக்கிய நகரப் பகுதிகளில் ஒரு கப் தேநீர் ரூ.40 வரை உயரலாம், அல்லது விலையை ஏற்றினால் கடைப்பக்கமே வர மாட்டார்கள் என்று சில காலம் விலை ஏற்றத்தை கடைக்காரர்கள் தள்ளிப்போடலாம் என்று கூறப்படுகிறது.
Summary
People are worried about what will happen to tea prices as the price of commercial cylinders has been increased to Rs. 3,237.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்?(ஜூன் 26)

இன்றைய தங்கம், வெள்ளி விலை குறைந்தது! (ஜூன் 24)

சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்

வணிக சமையல் எரிவாயு விலை ரூ.46 உயர்வு!
விடியோக்கள்

திறந்தே இருந்த திரைக்கதைப் பள்ளிக்கூடம் | Bhagyaraj | RIP director bhagyaraj
தினமணி செய்திச் சேவை

இது ஒன்றும் பெரிய விஷயமில்லை! தில்லி பிரதிநிதி நியமன சர்ச்சை குறித்து நிர்மல்குமார்!
இணையதளச் செய்திப் பிரிவு
சாதாரண இழப்பு கிடையாது! - பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் பிரேமலதா பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது அடி போடி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


