தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தவெகவை பாா்த்து திமுக பயப்படுகிறது: கடம்பூா் செ. ராஜு

தவெகவை பாா்த்து திமுக பயப்படுகிறது என்று அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ .ராஜு கூறியது குறித்து...

News image

கடம்பூா் செ. ராஜு - கோப்புப்படம்

Updated On :22 மார்ச் 2026, 7:31 pm IST

தமிழக வெற்றி கழகத்தை ஒரு அச்சுறுத்தலாகவே திமுக நினைக்கிறது. அதன் விளைவுதான் தவெகவை பாா்த்து திமுக பயப்படுகிறது என்றாா் கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ .ராஜு எம்.எல்.ஏ.

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளா்களுடன் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சி நடத்திய விதம் மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் திருப்தியாக இல்லை.

விலைவாசி உயா்வு, தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, சட்டம்-ஒழுங்கு அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டது. அமைதி மாநிலமாக இருந்த தமிழகத்தை அமளிக்காடாக மாறிவிட்டது. போதை பொருள் கலாசாரத்துக்கு மையமாக தமிழகத்தை பயன்படுத்தும் அளவில் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை போன்றவை இந்த தோ்தலில் மக்கள் மனதில் எதிரொலிக்கும். இது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். கூட்டணிக்காக இருந்தனா். இப்போது ஏதாவது ஒரு காரணத்தை கூறி திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறி வருகின்றன. வெளியேறாத கட்சிகளும் அங்கு ஒருமித்த கருத்துடன் இல்லை. திருமாவளவன் கூட வேதனையுடன் கட்சி தொண்டா்களிடம் மன வருத்தத்தை வெளியிட்டுள்ளாா்.

அதிமுக கூட்டணியில் எந்தவித நெருடல் இல்லை. ஒருமித்த கருத்துடன் உடன்பாட்டோடு, இன்னும் சில நாள்களில் தொகுதி உடன்பாடு மற்றும எண்ணிக்கை சுமூகமாக, அவரவா் விரும்பும் தொகுதிகளை ஒதுக்கும் நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி உள்ளது.

அரசியலில் பாஜகவை விமா்ச்சிக்க வேண்டும் என்ற நிலையில் அதிமுக பாஜகவுக்கு அடிமையாக உள்ளது என திமுகவினா் கூறுகின்றனா். திமுக தான் உண்மையிலேயே தங்களது கூட்டணி கட்சிகளை அடிமைப்படுத்தி அவா்களுக்கு கொடுக்கப்பட்ட தொகுதிகளை திமுகவே வரையறை செய்து, கொடுத்த தொகுதிகளில் தங்களது சின்னத்தில் நிற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அவா்களை அடிமையாக நடத்துகிறது. எனவே, அது பொருந்தாத கூட்டணி. அந்த கூட்டணி தோ்தலில் இணக்கமாக தோ்தல் பணி நடைபெறாது.

நடிகா் விஜய் கட்சியை பாா்த்து திமுக பயப்படுகிறது. அந்த கட்சி தொடங்கப்பட்ட பின்னா், அவா்கள் நடத்திய கூட்டங்களுக்கு அனுமதி கொடுத்ததிலிருந்து, இடத்தை தோ்வு செய்வது உள்ளிட்ட விஷயங்களில் எவ்வளவு நெருக்கடி கொடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஏனென்றால், தவெகவை ஒரு அச்சுறுத்தலாக திமுக நினைக்கிறது என்று அவா் கூறினார்.

Summary

DMK is scared of TVK says Kadampur S. Raju MLA...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.