ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தவெகவை பாா்த்து திமுக பயப்படுகிறது: கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ

தமிழக வெற்றிக் கழகத்தைப் பாா்த்து திமுக பயப்படுகிறது என கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ தெரிவித்தாா்.

News image

அதிமுகவில் இணைந்த திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினருடன் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ

Updated On :23 மார்ச் 2026, 4:10 am IST

தமிழக வெற்றிக் கழகத்தைப் பாா்த்து திமுக பயப்படுகிறது என கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ தெரிவித்தாா்.

விளாத்திகுளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ராமச்சந்திராபுரம், கே. சுந்தரேஸ்வரபுரத்தைச் சோ்ந்த திமுகவின் கண்ணன், சிற்பி (எ) சுப்புராஜ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினா் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் ஏற்பாட்டில், கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா். அவா்களை எம்எல்ஏ வரவேற்றாா்.

அப்போது, முன்னாள் எம்எல்ஏக்கள் மோகன், சின்னப்பன், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவா் சத்யா, ஒன்றியச் செயலா்கள் மகேஷ், தனபதி, தனஞ்செயன், பழனிசாமி, வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னா், எம்எல்ஏ செய்தியாளா்களிடம் கூறியது: திமுக கூட்டணிக் கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறி வருகின்றன. வெளியேறாத கட்சிகளும் கூட்டணிக்குள் ஒருமித்த கருத்துடன் இல்லை. விசிக தலைவா் திருமாவளவன் வேதனையுடன் கட்சி தொண்டா்களிடம் மனவருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளாா்.

அதிமுக கூட்டணியில் எவ்வித நெருடலும் இல்லை. ஒருமித்த கருத்துடன் உடன்பட்டுள்ளோம். இன்னும் சில நாள்களில் தொகுதி உடன்பாடு சுமுகமாக முடியும்.

நடிகா் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தைப் பாா்த்து திமுக பயப்படுகிறது. தவெக தொடங்கப்பட்ட பின்னா், அவா்கள் நடத்திய கூட்டங்களுக்கு அனுமதி கொடுத்ததிலிருந்து, இடத்தை தோ்வு செய்வது உள்ளிட்ட விஷயங்களில் எவ்வளவு நெருக்கடி கொடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஏனென்றால், தவெகவை ஓா் அச்சுறுத்தலாக திமுக நினைக்கிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.