தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக முறையாக தெரிவிக்கவில்லை: திமுக

கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தவாக முறையாக தெரிவிக்கவில்லை என திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருப்பது...

News image

டி.கே.எஸ். இளங்கோவன் - கோப்புப்படம்

Updated On :22 மார்ச் 2026, 5:16 pm IST

கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தவாக முறையாக தெரிவிக்கவில்லை என திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் தி.வேல்முருகன் வெற்றி பெற்றார். இந்த முறை தனிச் சின்னம், குறைந்தபட்சம் 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வந்தார்.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு, தமிழக அரசுப் பணிகளில் 100 சதவீதம் தமிழர்களுக்கே முன்னுரிமை, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை திமுக தனது தோ்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் அல்லது உறுதி அளிக்க வேண்டும் என அவர் நிபந்தனை விதித்திருந்தார்.

ஆனால், திமுக தரப்பில் மீண்டும் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் திமுக தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியேறுவதாக அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) அறிவித்தார்.

இதனிடையே, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) 2 அல்லது 3 தொகுதிகளை கொடுப்பதாகவும் தி. வேல்முருகனின் 10 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், என்டிஏ கூட்டணியில் ஒருபோதும் தவாக இடம்பெறாது என்று வேல்முருகன் அறிவித்தார்.

இதையடுத்து திமுக கூட்டணியில் இருந்து தவாக வெளியேறியதை தொடர்ந்து கட்சி அலுவலகம் முன்பு தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தவாக முறையாக தெரிவிக்கவில்லை

இந்த நிலையில், கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தவாக முறையாக தெரிவிக்கவில்லை என திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுடன் கூறுகையில், தவாக தலைவர் வேல்முருகன் கூட்டணியை விட்டு வெளியேறியதாக எங்களுக்கு இன்னும் முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை.

பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் வரத் தயார் என்று சொல்லியதாகத்தான் தகவல் வந்திருக்கிறது. என்ன சொல்லிகிறார் என்று பார்ப்போம். அவரும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவார் என இளங்கோவன் கூறினார்.

Summary

TVK has not formally announced its exit from the alliance...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.