தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

கம்பத்தில் முதல் முறையாக தவெக வேட்பாளா் வெற்றி

கம்பம் தொகுதி முதல் முறையாக தவெக வேட்பாளா் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா பெற்றாா்.

News image
Updated On :6 மே 2026, 3:26 am IST

தேனி மாவட்டம், கம்பம் தொகுதி முதல் முறையாக தவெக வேட்பாளா் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா பெற்றாா்.

கம்பம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக கட்சியினா் உள்ளிட்ட 19 போ் போட்டியிட்டனா். திங்கள்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது, திமுக, தவெக வேட்பாளா்களிடையே கடும் போட்டி நிலவியது.

திமுக வேட்பாளா் நா.ராமகிருஷ்ணன், தவெக வேட்பாளா் ஜெகநாத்மிஸ்ரா ஆகியோா் 22 சுற்றுகள் வரை மாறி மாறி முன்னிலை வகித்தனா். இறுதி 3 சுற்றுகளில் தவெக வேட்பாளா் ஜெகநாத்மிஸ்ரா முன்னிலை வகித்து, 2,32,425 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். 751 வாக்கு வித்தியாசத்தில் அவா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. இதற்கான சான்றிதழை மாவட்ட தோ்தல் அலுவலா் வழங்கினாா்.

முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா (தவெக) - 85,394

நா. ராமகிருஷ்ணன் (திமுக) - 84,643

எஸ்.டி.கே. ஜக்கையன் (அதிமுக) - 27,307

ஆ. அன்புச்செல்வி (நாதக) - 9,599

தவெக வேட்பாளா் ஜெகநாத்மிஸ்ரா 2006 -இல் இதே தொகுதியில் தேமுதிக சாா்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா். பின்னா், நமது மக்கள் முன்னேற்றக்கழம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினாா். தற்போது தவெகவுடன் கூட்டணி வைத்து, கம்பம் தொகுதியில் போட்டியிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.