மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யும் பாஜகவினரைக் காவல்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முடிவு பெற்று இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த பிப். 28 ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.
அந்தப் பட்டியலில் உயிரோடுள்ள வாக்காளர்கள் இறந்தவர்களாகக் குறிக்கப்பட்டுள்ளதென மமதா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நடைமுறையை எதிர்த்து கொல்கத்தாவின் முக்கிய நகரமான தர்மதலாவில் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) முதல் கடந்த மூன்று நாள்களாக மமதா போராட்டம் நடத்தி வருகிறார். முன்னதாக, தேர்தல் ஆணையத்தால் இறந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்களை இப்போராட்டக்களத்தில் முன் நிறுத்துவேன் என்று கூறியிருந்தார்.
இதனிடையே, இன்று (மார்ச் 7) போராட்டக்களத்தில் பேசிய மமதா, பாஜக நிர்வாகிகள் இப்போராட்டம் நடைபெறும் இடத்தில் பாஜக தொடர்புடையத் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வருவதாகக் குற்றஞ்சாட்டினார். அவ்வாறு வழங்குபவர்களைப் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைக்குமாறு திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், இதுபோன்று ஒரு கட்சியின் நிகழ்வில் மற்றொரு கட்சியினரின் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க யாருக்கும் எந்த உரிமையும் இல்லை எனவும் தெரிவித்தார்.
Summary
West Bengal Chief Minister Mamata Banerjee has ordered that BJP members distributing pamphlets be handed over to the police.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மமதா பதவி விலக மறுப்பு... மேற்கு வங்க சட்டப்பேரவையைக் கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!
நாங்கள் தோற்கவில்லை; பதவி விலக மாட்டேன்! மமதா

இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன்: மமதா பானர்ஜி

வாக்குச் சாவடியில் துண்டுப் பிரசுரம் வீச்சு - போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


