இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் பணிகளை அடுத்தடுத்து மேற்கொள்ளவுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி இன்று (ஏப். 5) தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 207, திரிணமூல் காங்கிரஸ் 80, காங்கிரஸ் 2, இதர கட்சிகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு மையங்களில் வன்முறை நேரிட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கை சில இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது. சில இடங்களில் வன்முறை நடக்கும்போதே எண்ணும் பணிகள் தொடர்ந்தன.
இந்நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களுடன் மமதா பானர்ஜி பேசியதாவது:
சோனியா காந்தி, ராகுல், ஹேமந்த் சோரன், அரவிந்த் கேஜரிவால், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் என்னைத் தொடர்புகொண்டு பேசினர். இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் என்னுடன் துணை நிற்பதாகக் கூறியுள்ளனர். எங்களுடைய ஒற்றுமை அடுத்தடுத்த நாள்களில் மேலும் வலுவடையும் என நினைக்கிறேன். அகிலேஷ் யாதவ் இன்று இங்கு வருவதாகக் கூறினார். ஆனால், நான்தான் மறுத்துவிட்டேன். நாளை வருவதாகக் கூறியுள்ளார். மேற்கு வங்கத்திற்கு அகிலேஷ் நாளை வருவார்.
ஒவ்வொருவராக அனைவரும் வருவார்கள். எனது இலக்கு மிகத் தெளிவானது. ஒரு எளிய மனிதனாக, நான் இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன். இப்போது என்னிடம் எந்தப் பதவியும் இல்லை; எனவே, நான் ஒரு சாதாரண குடிமகன். ஆகையால், நான் உங்கள் பதவியை (நாற்காலியை) பயன்படுத்திக்கொள்கிறேன் என்று நீங்கள் என்னிடம் கூற முடியாது.
இப்போது நான் ஒரு சுதந்திரப் பறவை. எனது முழு வாழ்நாளையும் மக்கள் சேவைக்கே அர்ப்பணித்திருக்கிறேன். கடந்த 15 ஆண்டுகளில், ஓய்வூதியமாக ஒரு பைசா கூட நான் பெற்றுக்கொண்டதில்லை. சம்பளமாகவும் ஒரு பைசா கூட நான் வாங்குவதில்லை.
ஆனால் இப்போது, நான் ஒரு சுதந்திரப் பறவை. எனவே, நான் ஏதேனும் ஒரு பணியைச் செய்தாக வேண்டும்; அதை நான் நிச்சயம் செய்து முடிப்பேன். மேற்கு வங்கத்தில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்குகள் திருடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் நடுநிலையாக இல்லை. மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்தப்பட்ட விதம் ஜனநாயகத்திற்கு விடுத்த சவாலாக உள்ளது. எனக் குறிப்பிட்டார்.
Summary
Mamata Banerjee says I will strengthen the INDIA team
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்சியைவிட்டு விலகுகிறேனா? திரிணமூல் எம்.பி. விளக்கம்!

மமதாவிடம் இருந்து திரிணமூலை கைப்பற்றும் ரிதப்ரதா பானர்ஜி! யார் இவர்?

மேற்கு வங்கத்தில் ‘மகாராஷ்டிர மாடல்’! மமதாவிடம் இருந்து பறிபோகும் திரிணமூல்?
பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் தில்லியில் அணிதிரளுவோம் - மமதா பானர்ஜி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


