நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த ஜன. 28-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கியது. கடந்த பிப்.13-ஆம் தேதியுடன் முதல்கட்ட அமா்வு நிறைவடைந்தது.
இந்த நிலையில், இரண்டாம் கட்ட அமர்வு இன்று காலை தொடங்கிய நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெறும் போர் குறித்து மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
மேற்காசிய போர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கோரிக்கை மறுக்கப்பட்டதால், எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், அமளிக்கு மத்தியில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தனது உரையை நிகழ்த்தினார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மேற்காசிய போர் விவகாரத்தில் இந்திய தலைமை அமைதி காப்பதாகவும், உறுதியான பிரதமர் தேவை என்றும் குற்றம்சாட்டி எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Summary
MPs protest in Parliament! Kharge, Rahul participate!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மல்லிகார்ஜுன கார்கே முதல்வரானால் வரவேற்போம்: கர்நாடக அமைச்சர் ஜி.பரமேஸ்வர்

ராகுலுடன் சேர்ந்து கார்கேயின் மேன்மை கெடுகிறது : அமித் ஷா
தமிழ்நாடு ஒருபோதும் அடக்குமுறைக்கு பணியாது! வேளச்சேரியில் கார்கே!

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


