மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ராகுலுடன் சேர்ந்து கார்கேயின் மேன்மை கெடுகிறது : அமித் ஷா

பிரதமர் மோடியை பயங்கரவாதி என கார்கே பேசியது குறித்து அமித் ஷா கருத்து...

News image

மேற்கு வங்கத்தில் சாலைவலம் மேற்கொண்ட அமித் ஷா - பிடிஐ

Updated On :22 ஏப்ரல் 2026, 8:49 pm IST

ராகுல் காந்தியுடன் சேர்ந்திருப்பதால் மல்லிகார்ஜுன கார்கேவின் மேன்மையும் கெடுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஏப். 22) விமர்சித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியை பயங்கரவாதி என மல்லிகார்ஜுன கார்கே பேசியதை சுட்டிக்காட்டி அமித் ஷா இவ்வாறு கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று (ஏப். 22) பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தின்போது, கார்கேவையும் ராகுல் காந்தியையும் விமர்சித்து அமித் ஷா பேசியதாவது:

''நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டுவரும் பிரதமர் நரேந்திர மோடியை பயங்கரவாதி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிடுகிறார். ராகுல் காந்தியுடனான சேர்க்கையால் மல்லிகார்ஜுன கார்கேவின் மேன்மையும், பேச்சும் தரமிழந்துள்ளது.

நீங்கள் எவ்வளவு அவதூறு பேசுகிறீர்களோ, எவ்வளவு சேற்றை வாரி இறைக்கிறீர்களோ, அதையெல்லாம் விட பெரியதாக தாமரை மலர்ந்தே தீரும். நாங்கள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம். இது முத்தலாக் முறையையும், நான்கு திருமணங்கள் செய்துகொள்வதையும் முடிவுக்கு கொண்டுவரும்'' என அமித் ஷா பேசினார்.

Summary

Rahul Baba s influence has corrupted Kharge ji's language too Amit Shah

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.