மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1,000 கோடி பறிமுதல்!

தேர்தலையொட்டி சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு குறித்த பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

News image

தேர்தல் ஆணையம் - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 7:02 pm IST

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில், ரூ. 1000 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பணம், மதுபானம், போதைப்பொருள்கள், தங்க நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்கள் என பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு குறித்த பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

இதில், தமிழ்நாட்டில் ரூ. 100.2 கோடி பணமும், மேற்கு வங்கத்தில் ரூ. 27.48 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று தமிழ்நாட்டில் 1,17,713 லிட்டர் மதுபானம், மேற்கு வங்கத்தில் 39,31,463 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 106.3 கோடி.

மேலும், தமிழ்நாட்டில் ரூ. 76.72 கோடி மதிப்புடைய போதைப் பொருள்களும் மேற்கு வங்கத்தில் ரூ. 108.11 கோடி மதிப்புடைய போதைப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு மொத்தமாக ரூ. 184.3 கோடி.

தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த நகைகளும் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ரூ. 159.1 கோடி மதிப்புடைய நகைகளும், மேற்கு வங்கத்தில் 55.88 கோடி மதிப்புடைய நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று இலவசமாகக் கொடுக்கப்பட்ட பொருள்களின் மதிப்பு மட்டும் இரு மாநிலங்களிலும் சேர்த்து ரூ. 437.97 கோடியாக உள்ளது.

இவ்வாறு, இரு மாநிலங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம், போதைப்பொருள், மதுபானங்கள், நகைகள், இலவசப் பொருள்களின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ. 1072.13 கோடி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Summary

Election Checks Goods Worth ₹1,000 Crore Seized in Tamil Nadu and West Bengal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.