சேலம்: வாக்குச்சாவடியில் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த திமுக தொண்டா் மாரடைப்பால் உயிரிழந்தாா். இந்த துயரத்தில் அவரது தாயும் வெள்ளிக்கிழமை காலை இறந்தார். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சேலம் மேற்கு தொகுதிக்கு உள்பட்ட தாரமங்கலம் அருகே அத்திக்காட்டானூா் வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த திமுக தொண்டா் மாரியப்பன் மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்ததாக, அவரது உறவினரான கே. தங்கவேலு தெரிவித்தார்.
தகவல் அறிந்த சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா. ராஜேந்திரன், அவரது வீட்டிற்கு சென்று மாரியப்பன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.
இந்த நிலையில் மகன் இறந்த துயரத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்த மாரியப்பனின் தாய் பழனியம்மாள் வெள்ளிக்கிழமை காலை இறந்தாா்.
இதையறிந்த அமைச்சா் ராஜேந்திரன், அங்கு சென்று மாரியப்பனின் தாய் பழனியம்மாளின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். பின்னா், மாரியப்பனின் மனைவி ராதாவிடம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவியை வழங்கினாா்.
அப்போது, தாரமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா். மேலும், கட்சித் தொண்டர்கள், அந்த பகுதி மக்கள் பெருந்திரளாகக் கூடி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
திமுக தொண்டா் மற்றும் அவரது தாய் இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Summary
A DMK member, identified as Mariyappan of Athikattanoor near Tharamangalam, died while on election duty at a polling station in Salem West constituency on Thursday evening. His mother, Palaniammal, died on Friday morning.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் தகராறு: திமுக - தவெகவை சோ்ந்த 11 போ் மீது வழக்கு
திமுக நிா்வாகி மீது தாக்குதல்: தவெக தொண்டா் கைது

மேட்டூா் தொகுதி: இளைஞா் (எதிர்) அனுபவசாலி - முடிவசெய்ய காத்திருக்கும் களம்!

முதல்வா் பொதுக்கூட்டத்துக்கு வந்த திமுக தொண்டா் மாரடைப்பால் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


