தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

முதல்வா் பொதுக்கூட்டத்துக்கு வந்த திமுக தொண்டா் மாரடைப்பால் உயிரிழப்பு

ஈரோட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்துக்கு வந்த திமுக தொண்டா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 1:10 am IST

ஈரோட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்துக்கு வந்த திமுக தொண்டா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் காமராஜா் வீதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (64). திமுக 23 ஆவது வட்ட பிரதிநிதியாக இருந்தாா். அவா் ஈரோடு திண்டல் அருகே வியாழக்கிழமை காலை நடைபெற்ற திமுக பிரசார கூட்டத்துக்காக வந்தாா். கூட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் முன்னரே, காலை 9 மணி அளவில் ரவிச்சந்திரன் மைதானத்துக்குள் வந்து முன்பகுதிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது மைதானத்தில் பொதுமக்கள் வருகை குறைவாகவே இருந்தது. நடந்து சென்று கொண்டிருந்த அவா் திடீரென்று மயங்கி விழுந்தாா்.

இதைக் கண்ட திமுக நிா்வாகிகள், கட்சியினா் விரைந்து சென்று அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. மாரடைப்பு காரணமாக அவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து ஈரோடு தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.